
சிறையில் இருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தான் மக்களின் இதயத்தில் இருப்பதாக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடு கட்சித் தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். தன்னை சிறையில் பார்க்க வந்த குடும்பத்தினரிடம் சந்திரபாபு நாயுடு இந்த கடிதத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதில் அவர் கூறியதாவது., 'நான் சிறையில் இல்லை. மக்களின் இதயங்களில் இருக்கிறேன். எந்த ஒரு சக்தியானாலும் என்னை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட முடியாது. நான் இப்போது மக்களிடையே இல்லை. ஆனால் வளர்ச்சியின் பெயரால் எல்லா இடங்களிலும் என் பெயர் உள்ளது. நான் எப்போதுமே மக்களுக்காக உழைத்து வந்துள்ளேன்.
எனது முதல் கவனம் மக்களின் வளர்ச்சி மற்றும் நலன்களை நோக்கியேதான் இருக்கிறது. நான் மாநிலத்தில் இல்லாதபோது மனைவி புவனேஸ்வரி என் சார்பில் செயல்படுவார். அவர் மக்களோடு தொடர்பில் இருப்பார். கால அவகாசம் எடுத்தாலும் நான் மக்களுக்காகவும், மாநில நலனுக்காகவும் உழைக்க புதிய வீரியத்துடன் வெளியே வருவேன்' என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!