தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்... மயிலாடுதுறையில் 82 வழக்குகள் பதிவு!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மக்களவைத் தேர்தலையொட்டி  மயிலாடுதுறை தொகுதியில் மட்டும் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை  82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.29,57,353 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19- ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் கொண்ட நிலையான குழுவினர், பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிகளை கண்காணித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறுகிறவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. 

அந்த வகையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 3,704 சுவா் விளம்பரங்களும், 6,863 சுவரொட்டிகளும், 475 பதாகைகளும், 751 இதர விளம்பரங்களும் அகற்றப்பட்டுள்ளன. 

விதிமுறைகளை மீறியதாக இதுவரை  82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நிலையான கண்காணிப்புக் குழுவினரின்  வாகனச் சோதனைகளில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட  ரூ.29,57,353 பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில்  85 வயதிற்கு மேற்பட்ட 7,749 வாக்காளா்களுக்கும், 10,478 மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கும் 12டி தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஊராட்சி அளவில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வுப் பேரணி உள்ளிட்டவை  நடத்தப்பட்டு வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in