பரபரப்பு... முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே ரூ.1000 உரிமைத் தொகை கேட்ட பெண்கள்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

ஸ்ரீபெரும்புதூர் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மகளிர் உதவித்தொகை கேட்டு பெண்கள் முறையிட்ட நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பத்துடன் மகளிர்.
கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பத்துடன் மகளிர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து சென்னைக்கு காரில் சென்றார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் கிராமத்தில் வழியாக கார் சென்றது. அங்கு வழியில் காத்திருந்த பெண்களைப் பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை நிறுத்தச் சொன்னார். அத்துடன் அப்பெண்களிடம் அவர் நலம் விசாரித்தார்.

அப்போது அங்கிருந்த கிளாய் பகுதியை சேர்ந்த இரண்டு கிராம பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 தங்களுக்கு கிடைக்கவில்லை என முதலமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக அருகில் இருந்த கட்சி பிரமுகரிடம் கேட்டறிந்த முதலமைச்சர், இது குறித்து உடனடியாக அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் பேசி மாதம் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் அப்பகுதியின் முக்கிய சாலைகளில் விளக்கு இல்லாமல் இருப்பதால் உடனடியாக உயர் கோபுர விளக்கு அமைக்கவும் அறிவுறுத்தினார். இந்த வீடியோ சமுக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


இதையும் வாசிக்கலாமே...

மக்களவை தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா... போட்டியிடப் போவது உ.பியா... ம.பியா?

இன்று கடைசி தேதி... மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

ஒரே தேர்வு மையத்தில் அதிக தேர்ச்சி...எஸ்.ஐ தேர்வு குறித்து விசாரணை கேட்கும் அண்ணாமலை!

சடசடவென சரிந்து வரும் தங்கத்தின் விலை...மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

இளைய மகளுடன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in