
சென்னை சூளை பகுதியில் நள்ளிரவு ரோந்து பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரிடம் ரவுடி ஒருவர் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் கவுரி நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சூளை பகுதியை சேர்ந்த ‘பி’ கேட்டகிரி ரவுடியான கிஷோர் (எ) கால்வாய் கிஷோர் (28) கஞ்சா போதையில் பொதுமக்களை தொந்தரவு செய்வதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் கவுரி அங்கு சென்ற போது, ரவுடி கிஷோர் போலீஸ் என்றும் பாராமல், கவுரியை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். நிலைமையை உணர்ந்த உதவி ஆய்வாளர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கவுரி அளித்த புகாரின் அடிப்படையில் ரவுடி கிஷோரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதிகளவில் கஞ்சா போதையில் இருந்ததால் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, போதை தெளிந்ததும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் காவல் ஆய்வாளருக்கு ரவுடி மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!
பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!
விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!
வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!
குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!