நவரத்தினா அந்தஸ்து பெற்றது IRCON இன்டர்நேஷனல்... மத்திய அரசு அங்கீகாரம்!

Ircon இன்டர்நேஷனல் தலைமை அலுவலகம்
Ircon இன்டர்நேஷனல் தலைமை அலுவலகம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான IRCON இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு மத்திய அரசு நவரத்னா அந்தஸ்து வழங்கியுள்ளது.

IRCON International நிறுவனம் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் முதல் விமான நிலையங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் விரைவான போக்குவரத்து அமைப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் வரையிலான உள்கட்டமைப்பு கட்டுமான சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதுமட்டும் இல்லாமல் RITES போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆலோசனை, ரயில்வே ஆய்வு, ரோலிங் ஸ்டாக் குத்தகை மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகிறது.

ஏற்கெனவே மத்திய அரசு 14 பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த நவரத்னா அந்தஸ்து வழங்கியுள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ், கான்கார், இன்ஜினியர்ஸ் இந்தியா, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், எம்டிஎன்எல், நால்கோ, என்பிசிசி, என்எல்சி இந்தியா, என்எம்டிசி லிமிடெட், ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஆர்விஎன்எல், ஓஎன்ஜிசி மற்றும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் ஆகியவை ஏற்கனவே மத்திய அரசன் நவரத்தின அங்கீகாரம் பெற்றுள்ளவையாகும்.

ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கு நவரத்னா அந்தஸ்து கிடைக்க வேண்டுமெனில், அந்நிறுவனம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நிகர லாபம் ஈட்ட வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நிறுவனத்தின் வருவாய் ரூ.25,000 கோடிக்கு மேல் 3 வருடங்களுக்கு இருக்க வேண்டும். மேலும் நிறுவனத்தின் மொத்த மதிப்பு மூன்று ஆண்டுகளுக்கு 15,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த நவரத்னா அந்தஸ்து கிடைக்கும்.

2023-ம் ஆண்டில் இதுவரை IRCON இன்டர்நேஷனல் பங்கின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. மேலும் மத்திய அரசின் அங்கீகாரத்தால்  பங்கின் விலை உயரத் தொடங்கியுள்ளது.  நேற்று  பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்துள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in