மதுரையில் இருந்து தினசரி நேரடி விமான சேவை! நாளை மறுநாள் முதல் துவக்கம்!

மதுரையில் இருந்து தினசரி நேரடி விமான சேவை! நாளை மறுநாள் முதல் துவக்கம்!

நாளை மறுநாள் அக்டோபர் 22ம் தேதி முதல் மதுரையில் இருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு விமான சேவை துவங்கவுள்ளது குறித்த அறிவிப்புக்கு மதுரை மக்களிடையே பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ரயில், பேருந்து முன்பதிவுகள் முடிந்து, ஆளாளுக்கு தட்கல் டிக்கெட், சிறப்பு ரயில்களில் குறித்த அறிவிப்புகளில் மூழ்கியுள்ளனர். அதே போல் சொந்த ஊர் நோக்கி வரும் வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் வசதிக்காக விமான நிறுவனங்களும் புதிய விமான சேவைகளை அதிரடியாக அறிவித்து வருகின்றன.

அதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மதுரை, சிங்கப்பூர் இடையே நேரடி மற்றும் தினசரி விமான சேவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த சேவை வரும் 22-ம் தேதி முதல் இந்த விமான சேவை பயன்பாட்டிற்கு வருகிறது. இதையடுத்து, இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பு, சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையேயும், மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதி மக்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in