தண்ணீரில் மிதக்கும் உணவகம்... விரைவில் சென்னையில் அறிமுகம்!

மிதக்கும் உணவகம்
மிதக்கும் உணவகம்

பிற நாடுகளில் உள்ளதைப் போல சென்னையிலும் மிதக்கும் உணவகம்  விரைவில் செயல்படத் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய திட்டங்களை கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் கடலில் மிதக்கும் உணவகத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

சென்னையில் உள்ள மக்களில் பலர் வார விடுமுறையை கழிக்க கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள  முட்டுக்காடு பகுதிக்கு பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. அதனை முன்னிட்டு முட்டுக்காடு பகுதியில் மிதக்கும் உணவகத்தை அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளது.

தமிழக அரசு இந்த மிதக்கும் உணவகத்திற்கு அனுமதி வழங்கியதை அடுத்து கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இதற்காக ஒரு  மிதவை கப்பலை உருவாக்கி வருகிறது. 125 அடி நீளம் 25 அடி அகலத்தில் தயாராகும்  இந்த மிதவை கப்பல் இரண்டு அடுக்குகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலில் பயணித்துக் கொண்டே உணவருந்தலாம்.

கப்பலின் மேல் தளம் திறந்தவெளியாக இருக்கும். கீழே ஏசி வசதியுடன் கூடிய இருக்கைகள் இருக்கும். இந்த கப்பலில் சமையலறை, உணவு கிடங்கு, கழிவறை உள்ளிட்டவையும் இருக்கும். இதனால் சில உணவுகளை கப்பலிலேயே சமைத்தும் சிலவற்றை வெளியில் இருந்து தயார் செய்து கொண்டு வந்தும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் கீழ்த்தளம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இதன் மேல்தளம் மட்டும் பாக்கியுள்ளது. எனவே இந்த கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டால் இந்த உணவகம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்திற்கு நிறைய வெளிநாட்டு பயணிகள் வருகிறார்கள், அவர்களை இந்த மிதக்கும் உணவகம் நிச்சயம் கவரும். இதற்கான கட்டணம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதுபோல் கோவையிலும் மிதக்கும் உணவகம் கொண்டு வரப்படும் என சொல்லப்படுகிறது. உலகின் மிகப்பெரிய மிதக்கும் உணவகம் துபாயில் ரூஸ்டர் தோவில் இருக்கிறது. இங்கு ஒரே நேரத்தில் 400 பேர் சாப்பிடலாம். அதுபோல் ஐரோப்பா,  சீனா,  வியத்நாமிலும் மிதக்கும் உணவகங்கள் உள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!

இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in