‘கேள்விக்குறியான அரசு வேலை...’ இடஒதுக்கீடு போராட்டத்தில் மேலும் ஒருவர் தற்கொலை

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்

மகாராஷ்டிரத்தில் பற்றியெரியும் மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில், அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கான இடஒதுக்கீட்டினை வலுயுறுத்தி, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவான மராத்தா சமூகத்தினர் தீவிரமாக போராடி வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் தற்கொலை முடிவைத் தேடுவதன் வரிசையில், மேலும் ஒரு இளைஞர் தீபாவளி அன்று உயிரிழந்தார்.

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்
மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்

மராத்தா சமூகத்தை சேர்ந்த தாஜிபா ராம்தாஸ் என்ற 23 வயது இளைஞர் மர்லாக் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். பணி நிமித்தம் நான்டெட் நகருக்கு வந்த அவர், ஜெண்டா சவுக் பகுதியில் விஷம் அருந்திய நிலையில் நவ.11 அன்று மீட்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நவ.12 அன்று இறந்தார்.

தாஜிபா ராம்தாஸ் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், அவரது தற்கொலை மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்துக்கானது என்பதை இன்று(நவ.14) உறுதி செய்தனர்.

தாஜிபாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலை குறிப்பில், ’இது எனது அரசு வேலை பற்றிய கேள்வி...’ என எழுதப்பட்டிருந்தது. தாஜிபா அரசுப் பணிக்காக முயற்சித்தவர் என்பதும், அது கிடைக்க வாய்ப்பில்லை என்ற விரக்தியில், மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வருகிறது.

தற்கொலை
தற்கொலை

எனினும் 'எதிர்பாரா மரணம்’ என்பதற்கான பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, தாஜிபாவின் இதர பின்னணிகள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சாதி வகைமையில் ஓபிசி பிரிவின் கீழ் வரும் மராத்தா மக்கள், மகாராஷ்டிர மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் உள்ளனர். அரசு வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கோரி இவர்கள் மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் குழுவினருடன் மாநில அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், அண்மையில் சுமூக முடிவு எட்டப்பட்டது. இதனையடுத்து மராத்தா போராட்டத்தின் வேகம் தணிந்தது.

எனினும் அரசு உறுதியளித்த இட ஒதுக்கீட்டை டிசம்பர் 24க்குள் அறிவிக்க வேண்டும் என அடுத்தக்கட்ட போராட்டம் தொடங்கியதில், மீண்டும் தற்கொலை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் அங்கே தொடர்ந்து வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!

நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!

பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!

ரூ.40 லட்சம் மதிப்புள்ள இறால்கள் மடிந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in