அதிர்ச்சி... தேவாலய பிரார்த்தனையில் சுருண்டு விழுந்து மாணவர் மரணம்!

அதிர்ச்சி... தேவாலய பிரார்த்தனையில் சுருண்டு விழுந்து மாணவர் மரணம்!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரப்பள்ளியில் தேவாலயம் ஒன்றில் நேற்று பிப்ரவரி 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நடைப்பெற்ற கூட்டு பிரார்த்தனையின் போது, பிளஸ் 1 மாணவன் மயங்கி, சரிந்து விழுந்து வாயில் நுரை தள்ளியபடியே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தில், அனக்கல் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி, வழக்கமான ஆராதனைக்காக அந்த திருச்சபையின் பக்தர்கள் திரண்டிருந்தனர். நேற்று காலை 7 மணியளவில் ஆராதனைத் துவங்கி நடந்து கொண்டிருந்த போது, திடீரென பால் ஜோசப் என்பவரின் மகன் மிலன் பால் (16) எனும் மாணவன், மயங்கி சரிந்து விழுந்து உயிரிழந்தார். அந்த திருச்சபையின் பலிபீடப் சிறுவனாகவும் மிலன் பால் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

திடீரென அருகில் இருந்த மாணவன் மயங்கி விழுந்ததைக் கண்டு அருகில் இருந்தவர்கள் உதவி செய்ய முயன்றனர். உடனடியாக வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்த மிலனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே மிலன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். மாணவன் மிலனின் இறப்புக்கான காரணம் என்னவென இன்னும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

புனித அந்தோணியார் தேவாலயம், அனக்கல், கோட்டயம்
புனித அந்தோணியார் தேவாலயம், அனக்கல், கோட்டயம்

மிலன் காஞ்சிரப்பள்ளியில் உள்ள செயின்ட் அந்தோனி பப்ளிக் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தகவலறிந்த போலீஸார், மிலனை உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே மாணவன் மிலன் இறப்புக்கான காரணம் தெரியவரும்.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்... மீண்டும் விவாதத்துக்கு வந்த ‘விதை நீக்கம்’ தண்டனை

“வந்துட்டேன்னு சொல்லு...” சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in