
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் நேற்று ஒரு கிராம் 5,585 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,660 ரூபாயாகவும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 45,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து, 6,130 ரூபாய்க்கும், சவரனுக்கு 700 ரூபாய் உயர்ந்து, 49,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையில் இன்று எந்தவிதமான மாற்றமும் இன்றி ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,500 ரூபாயாககவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்
10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!
ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!
அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!