இவிஎம் - விவிபாட் வழக்கில் இன்று வெளியாகிறது தீர்ப்பு: திருப்புமுனை ஏற்படுத்துமா உச்சநீதிமன்றம்?

கன்ட்ரோல் யூனிட், இவிஎம், விவிபாட்
கன்ட்ரோல் யூனிட், இவிஎம், விவிபாட்

இவிஎம், விவிபாட் இயந்திரங்களின் வாக்குப்பதிவு விவரங்களை 100 சதவீதம் எண்ணி சரிபார்க்க கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியிட உள்ளது.

தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) முறைகேடு செய்யப்படலாம் என குற்றம் சாட்டி பல்வேறு தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவிஎம் இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளையும், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை (விவிபாட்) ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் முழுமையாக எண்ணி சரிபார்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதேபோல், மனுதாரர்களில் ஒருவரான தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தனது மனுவில், 'வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை (விவிபாட்) இயந்திரங்களில் வெளிப்படையான கண்ணாடிக்கு பதில், ஒளிபுகா கண்ணாடி மாற்றப்பட்டுள்ளது.

இதனால் வாக்காளர்கள் 7 விநாடிகள் ஒளிரும் போது மட்டுமே ஒப்புகை சீட்டைப் பார்க்க முடியும். தேர்தல் ஆணையத்தின் 2017ம் ஆண்டின் இந்த முடிவை மாற்றியமைக்க வேண்டும்' என கோரியுள்ளது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

முன்னதாக கடந்த புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இவிஎம்-களின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களின் அடிப்படையில் மட்டுமே தேர்தல்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவோ முடியாது என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியிட உள்ளது. இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இவிஎம், விவிபாட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in