வைரலாகும் சிறிய ராம் லல்லா சிலை... சிற்பி அருண் யோகிராஜ் நெகிழ்ச்சி!

சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்த ராம் லல்லா சிலைகள்
சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்த ராம் லல்லா சிலைகள்

அயோத்தி ராம் லல்லா சிலையை வடிவமைத்த புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ், சிறிய அளவிலான ராம் லல்லா சிலையை உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராம ஜன்மபூமி கோயிலின் கருவறையில், கர்நாடகாவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்த ராம் லல்லா (பாலராமர்) சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, மூலவர் ராம் லல்லா எப்படி இருக்கும், அதனை வடிவமைத்தவர் யார்? என்பன போன்ற தகவல்கள் ராம பக்தர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், அருண் யோகிராஜ் வடிவமைத்த ராம் லல்லா தவிர மேலும், இரு ராம் லல்லா சிலைகள் வேறு சிற்பிகள் மூலம் வடிவமைக்கப்பட்டு அவற்றில் சிறந்த அருண் யோகிராஜ் வடிமைத்த ராம் லல்லா சிலை தேர்வானது.

அயோத்தி ராம் லல்லா கண்களை செதுக்க பயன்படுத்தப்பட்ட தங்க உளி, வெள்ளி சுத்தியல்
அயோத்தி ராம் லல்லா கண்களை செதுக்க பயன்படுத்தப்பட்ட தங்க உளி, வெள்ளி சுத்தியல்

இந்நிலையில் அயோத்த மூலவர் சிலை போன்ற மிகச்சிறிய அளவிலான ராம் லல்லா சிலையை அருண் யோகிராஜ் வடிவமைத்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் தான் உருவாக்கியுள்ள சிறிய அளவிலான ராம் லல்லா புகைப்படத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மூலவர் ராம் லல்லா மூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அயோத்தியில் எனது ஓய்வு நேரத்தில் மற்றொரு சிறிய ராம் லல்லா மூர்த்தியை செதுக்கினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. முன்னதாக, ராம் லல்லா சிலையின் கண்களை செதுக்க பயன்படுத்திய சிறப்பு கருவிகளின் படத்தையும் அருண் யோகிராஜ் வெளியிட்டிருந்தார். அப்போது அவர் கூறுகையில், "அயோத்தி ராம் லல்லாவின் தெய்வீகக் கண்களை (நெட்ரோன்மிலனா) செதுக்கிய தங்க உளி, வெள்ளி சுத்தியல் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in