காங்கிரஸூக்கு 40 தொகுதிகளாவது கிடைக்க வேண்டும்... மாநிலங்களவையில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடி உரை

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு 40 தொகுதிகளாவது கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முா்மு உரையுடன் தொடங்கியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குக் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி மக்களவையில் பதிலளித்தார். இந்நிலையில், இன்று அது தொடர்பாக மாநிலங்களவையில் உரையாற்றி வருகிறார்.

மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி
மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி

அதில், “ நாட்டின் 75வது குடியரசு தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டை வலுப்படுத்துவது தொடர்பான குடியரசுத்தலைவரின் உரை முக்கியத்துவம் வாய்ந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசு மீது வைத்து வரும் விமர்சனத்திற்கு நன்றி.

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என ஆசீர்வதித்துள்ளார். அதேபோல், காங்கிரஸ் கட்சியும் 40 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்

மேலும், “அரசின் பேச்சை மக்கள் கேட்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதனால், எனது குரலை எதிர்க்கட்சியினரால் ஒடுக்க முடியாது என்றார். ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ் கட்சி இப்படி ஆகிவிட்டது. காங்கிரஸ் கட்சித்தலைவர்களின் எண்ணங்கள் காலாவதியாகிவிட்டன. காங்கிரஸால் அதன் தலைவர்களுக்கே உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில் எமர்ஜென்சி உட்பட எண்ணற்ற ஒடுக்குமுறைகள் நடந்தன.

பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடி உரை

நக்சலைட், மாவோயிட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காங்கிரஸ் ஆட்சியாளர்களே காரணம். நாட்டை வடக்கு,தெற்கு என பிரித்தாள நினைக்கிறது காங்கிரஸ். விவசாயிகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரானதாக இருந்தது. அவர்கள் அதிகாரம் பெறுவதற்கு எதிராகவும் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 12வது இடத்தில் இருந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் அதனை 5வது இடத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்” என்று பிரதமர் மோடி கூறினார்.

காங்கிரஸ் கட்சி மீதான பிரதமர் மோடியின் இந்த விமர்சனங்களுக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களையும், கோஷங்களையும் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in