நவராத்திரி: 9 நாட்களும் போடவேண்டிய கோலங்கள்... பாடவேண்டிய ராகங்கள்!

நவராத்திரி: 9 நாட்களும் போடவேண்டிய கோலங்கள்... பாடவேண்டிய ராகங்கள்!

நவராத்திரி என்பது சக்தியைக் கொண்டாடும் பண்டிகை. சக்தியாகிய பெண்கள் கொண்டாடுகிற பண்டிகை. ஒன்பது நாளும், அக்கம்பக்கத்து பெண்களை அழைத்துக் கொண்டாடுகிற பண்டிகை. கூட்டுப் பிரார்த்தனை போல, கொலுவை வைத்துக்கொண்டு, பெண்கள் பலரும் வேண்டிக் கொள்கிற பண்டிகை.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கோலங்களை இடுவதும், கொலு வைபவத்தின் போது, ஒவ்வொரு ராகத்தில் இசைப்பதும் விசேஷமானவை. அதேபோல், அம்பாள் சிலையோ, படமோ இருந்தால், அம்பாளுக்கு அணிவிக்கிற மாலையையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அதேபோல, நவராத்திரிப் பெருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் கொலுவுக்கு வருகின்ற பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும், நவராத்திரி வைபவத்தில் ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய நைவேத்தியங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.

நவராத்திரியின் போது போட வேண்டிய கோலங்கள்:

• முதல் நாள் – அரிசி மாவு பொட்டுக்கோலம்

• இரண்டாம் நாள் – கோதுமை மாவுக் கட்டம்

• மூன்றாம் நாள் –முத்து மலர்க்கோலம்

• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டுக் கோலம்

• ஐந்தாம் நாள் – பறவையினக் கோலம்

• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்

• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர்களால் ஆன கோலம்)

• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)

• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிடவேண்டும்)

ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்:

• முதல்நாள் – தோடி

• இரண்டாம் நாள் – கல்யாணி

• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை

• நான்காம் நாள் – பைரவி

• ஐந்தாம் நாள் – பந்துவராளி

• ஆறாம் நாள் – நீலாம்பரி

• ஏழாம் நாள் – பிலஹரி

• எட்டாம் நாள் – புன்னாகவராளி

• ஒன்பதாம் நாள் – வஸந்தா

ஒன்பது நாட்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:

• முதல் நாள் – மல்லிகை

• இரண்டாம் நாள் – முல்லை

• மூன்றாம் நாள் – செண்பகம், மரு

• நான்காம் நாள் – ஜாதிமல்லி

• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்

• ஆறாம் நாள் – செம்பருத்தி

• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம்

• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ

• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து

ஒன்பது நாள்களும் வருகின்ற பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:

• முதல் நாள் – வாழைப்பழம்

• இரண்டாம் நாள் – மாம்பழம்

• மூன்றாம் நாள் – பலாப்பழம் (பலாச்சுளை)

• நான்காம் நாள் – கொய்யாப்பழம்

• ஐந்தாம் நாள் – மாதுளை

• ஆறாம் நாள் – ஆரஞ்சு

• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்

• எட்டாம் நாள் – திராட்சை

• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்

ஒன்பது நாட்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:

• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்

• இரண்டாம் நாள் – புளியோதரை

• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்

• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)

• ஐந்தாம் நாள் – தயிர்சாதம், பொங்கல்

• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்

• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்

• எட்டாம் நாள் – பால் பாயசம்

• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரைப் பொங்கல்.

நவராத்திரிப் பெருவிழாவை, உரிய முறையில் செய்து, அக்கம்பக்கத்துப் பெண்களை அழைத்து, சுமங்கலிகளை உரிய முறையில் கெளரவித்து, அம்பாளை வேண்டிக்கொண்டால், நல்லன எல்லாம் தந்து நம்மையும் நம் குடும்பத்தையும் தேவியர் காத்தருளுவார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in