மத்திய அரசின் தலையீடு... கூகுள் பிளே ஸ்டோரில் நீக்கப்பட்ட ஆப்-கள் மீண்டும் இடம்பெற்றன!

மொபைல் ஆப்கள்
மொபைல் ஆப்கள்

மத்திய அரசின் தலையீடைத் தொடர்ந்து, தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட சில இந்திய ஆப்கள் மீண்டும் தளத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கூகுள்
கூகுள்

பிளே ஸ்டோரில் பயன்பாட்டு கட்டணம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு வணிக ஆப் (செயலி) நிறுவனங்களுக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூகுள் 11 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் இதனை தொடர்புடைய நிறுவனங்கள் செலுத்த விரும்பவில்லை. இதனால், இந்தியாவை சேர்ந்த திருமண பயன்பாடு ஆப்-களான பாரத் மேட்ரிமோனி, ஷாதி, 99 ஏக்கர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஆப்-களை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் அதிரடியாக நீக்கியது.

இணையதளம், ஆப் மூலம் தொழில்களை நடத்தி வரும் நிறுவனங்கள் கூகுளின் அதிரடியால் அதிர்ந்தன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டது.

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "கூகுள் நடவடிக்கையை அரசு கடுமையாக எதிர்க்கிறது. பிளே ஸ்டோரிலிருந்து சில பயன்பாடு ஆப்-களை கூகுள் நீக்கியது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்-களை பட்டியலிலிருந்து நீக்குவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் " என்றார்.

மத்திய அமைச்சரின் கருத்தைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தால் நீக்கப்பட்ட சில ஆப்-களை மீண்டும் பிளே ஸ்டோருக்குள் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இன்ஃபோ எட்ஜ் இந்தியா, நௌக்ரி, 99 ஏக்கர், நௌக்ரி கல்ஃப், ஷாதி ஆகிய ஆப்கள் இன்று மதியத்துக்குப் பிறகு மீண்டும் பிளே ஸ்டோருக்குள் வந்துள்ளன.

கூகுள் பிளே ஸ்டோர்
கூகுள் பிளே ஸ்டோர்

அதே நேரத்தில் பாரத் மேட்ரிமோனி உள்ளிட்ட நீக்கப்பட்ட மற்ற ஆப்கள் மீண்டும் இடம்பெறவில்லை. இருப்பினும், தற்போதைய நிலையில் அரசின் உடனடி தலையீட்டால் நீக்கப்பட்ட ஆப்கள் மீண்டும் இடம்பெற்று வருவதற்கு தொடர்புடைய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in