என் மனைவிக்கு சீட் இல்லையா... காங்கிரஸுக்கு முழுக்குப் போட்ட அசாம் எம்எல்ஏ!

பாரத் சந்திர நாரா
பாரத் சந்திர நாரா

மக்களவைத் தேர்தலில் தனது மனைவிக்கு சீட் வழங்காததால், காங்கிரஸ் கட்சியிலிருந்து, அசாம் எம்எல்ஏ-வான பாரத் சந்திர நாரா விலகியுள்ளார்.

பாரத் சந்திர நாரா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைவருக்கு கடிதம்
பாரத் சந்திர நாரா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைவருக்கு கடிதம்

அசாம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள நவோபொய்சா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருப்பவர் பாரத் சந்திர நாரா. இவர், வரும் மக்களவைத் தேர்தலில் லக்கிம்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தனது மனைவி ராணி நாராவை வேட்பாளராக நிறுத்த முயற்சித்து வந்தார். ராணி நாரா ஏற்கெனவே மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.

இந்நிலையில் லக்கிம்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் உதய் சங்கர் ஹசாரிகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த பாரத் சந்திர நாரா, உடனடியாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், அசாம் மாநில காங்கிரஸின் ஊடகப் பிரிவு தலைவர் பதவியையும் பாரத் சந்திர நாரா ராஜினாமா செய்தார். இவர், தாகுகானா தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றவர்.

ராணி நாரா
ராணி நாரா

கடந்த 2021-ல் நவோபொய்சா தொகுதியில் வெற்றி பெற்று 6-வது முறையாக எம்எல்ஏ ஆனார். காங்கிரஸில் சேர்வதற்கு முன்பு, பாரத் சந்திர நாரா, அசோம் கண பரிஷத் (ஏஜிபி) கட்சியில் இருந்தார்.

நாரா, ஏஜிபி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியிலும் முன்பு அமைச்சராக பதவி வகித்தவர். முன்னாள் முதல்வர் தருண் கோகாயின் ஊடக ஆலோசகராகவும் இருந்துள்ளார். இவரது மனைவி ராணி நாரா, லக்கிம்பூரில் இருந்து மூன்று முறை காங்கிரஸ் சார்பில் எம்பி-யாக வெற்றி பெற்றவர். மாநிலங்களவையிலும் ஒரு முறை எம்பி-யாக பணியாற்றியுள்ளார்.


பின்னர் பாஜகவில் இணைந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு தேர்தலில் சீட் கிடைக்காததால், ராணா நாராவின் கணவர் பாரத் சந்திர நாரா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in