ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: கர்நாடகா உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

ஹிஜாப்
ஹிஜாப்

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடைவித்ததாக வந்த தகவலில் உண்மை இல்லை என கர்நாநடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் விளக்கமளித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 6-ம் தேதி அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் பெண்கள் தாலி உள்ளிட்டவை அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, பெண்கள் தாலி, மெட்டி அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் அரசு பணிக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்காக, கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய விதிமுறையை நேற்று அறிவித்தது. அதில் இனி தேர்வு மையங்களில் தலைப்பாகை, ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர்
கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர்

தேர்வில் புளூடூத் உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு முறைகேடு செய்ய முடியும் என்பதால், அதனைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கர்நாடக அரசின் இந்த அறிவிப்பிற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இதுதொடர்பாக அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் விளக்கமளித்துள்ளார். அதில், அரசின் அறிவிப்பை பலரும் தவறாக புரிந்துகொண்டதாகவும், அரசு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடைவிதிக்கவில்லை என்றும் கூறினார்.

முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அணிந்தால், புளூ டூத் போன்ற கருவிகள் பயன்படுத்தி தேர்வில் முறைகேடு செய்ய முடியும். அதனைத் தடுக்கவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்தார். மேலும், ஹிஜாப் தலையை மட்டுமே மூடுவதாகவும், முகத்தை அது மறைப்பதில்லை என்பதால், ஹிஜாப் அணிய எந்த தடையும் இல்லை என்று விளக்கமளித்துள்ளர்.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!

மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in