உ.பி தாதா முக்தார் அன்சாரியின் இறுதிச்சடங்கில் நிரம்பி வழியும் கூட்டம்... 3 ஆயிரம் போலீஸார் குவிப்பு!

முக்தார் அன்சாரியின் இறுதி சடங்கில் திரண்ட கூட்டம்
முக்தார் அன்சாரியின் இறுதி சடங்கில் திரண்ட கூட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம், பண்டா சிறையில் உயிரிழந்த தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரியின் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

முக்தார் அன்சாரி
முக்தார் அன்சாரி

உத்தரப் பிரதேச மாநிலம், மவு தொகுதி எம்எல்ஏ-வாகவும், பிரபல தாதாவாகவும் இருந்தவர் முக்தார் அன்சாரி. இவர் மீது 60-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதற்கிடையே முக்தார் அன்சாரிக்கு சிறையில் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது மகன் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தாதா முக்தார் அன்சாரி இறப்பைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் செல்வாக்காக திகழ்ந்த மவு, காஜிப்பூர், வாரணாசி மற்றும் ஜான்பூர் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, பெரிய அளவிலான கூட்டங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முக்தார் அன்சாரியின் பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பால் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதே பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடல், இளைய மகன் உமர் அன்சாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து காஜிப்பூரில் உள்ள மூதாதையரின் காளி பாக் கல்லறையில் முக்தார் அன்சாரியின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கிற்கு முன்னதாக, மொஹமதாபாத்தில் உள்ள அன்சாரியின் இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சுமார் 3 ஆயிரம் போலீஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in