41 பேரும் நலமாக இருப்பதாக தகவல்: உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு குழாய் மூலம் கிச்சடி உணவு!

சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு கூழ் வடிவில் கிச்சடி
சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு கூழ் வடிவில் கிச்சடி

உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கம் தோண்டும் பணியின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் கிச்சடி உணவு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 12-ம் தேதி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது ஒரு பகுதியில் மண் சரிந்து விழுந்து சுரங்கத்தினுள் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவுகள் உள்ளிட்டவற்றை வழங்க 6 அங்குல அகலத்தில் 40 மீட்டர் நீளத்துக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

கிச்சடி தயாரித்து குழாயில் செலுத்தும் பணி தீவிரம்
கிச்சடி தயாரித்து குழாயில் செலுத்தும் பணி தீவிரம்

அந்தக் குழாய் மூலம் உள்ளே செலுத்தப்பட்ட கேமராவால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மீட்புக் குழுவினர் இன்று வெளியிட்டனர். சுரங்கத்தினுள் 41 தொழிலாளர்களும் நலமுடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு இன்று உணவுக்காக பொருத்தப்பட்டுள்ள குழாய் மூலம் பாட்டில்களில் கிச்சடி அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து நடைபெற்ற சுரங்கம்
விபத்து நடைபெற்ற சுரங்கம்

அத்துடன் பருப்பும் பாட்டில் மூலம் அனுப்பப்பட்டது. தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் மீட்கப்படுவார்கள் என்றும் உத்தராகண்ட மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே சம்பவ இடத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பார்வையிட்டுள்ள நிலையில், மீட்புப்பணிகள் குறித்து முதல்வர் மற்றும் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா

நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!

அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!

அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in