குழந்தை
குழந்தை

விநோத வழக்கு... குழந்தைக்கு பெயர் சூட்டிய நீதிமன்றம்!

குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் பெற்றோர் மத்தியில் எழுந்த பூசலைத் தீர்த்துவைக்க, கடைசியில் நீதிமன்றமே பெயர் சூட்ட வேண்டியதாயிற்று.

நீதிமன்றங்கள் எப்போதும் அனல் பறக்கும் விவாதங்கள், நாட்டை உலுக்கும் தீர்ப்புகள் என சீரியசாகவே இருப்பதில்லை. அவ்வப்போது வேடிக்கையான மற்றும் விநோதமான வழக்குகளும் நீதிமன்றங்களில் அரங்கேறுவதுண்டு. அந்த வகையில் குழந்தைக்கு பெயர் சூட்டும் வழக்கு ஒன்று கேரள நீதிமன்றத்தில் கவனம் ஈர்த்தது.

பரஸ்பரம் பிரிந்து வாழும் தாய் - தந்தை இடையே, அவர்களது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் பிரச்சினை முளைத்தது. அது பெரும் பூசலாக வெடித்ததில், கேரள உயர் நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடுத்தனர்.

குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் தங்களுக்கே அதிகாரம் உண்டு என தாய் - தந்தை என இரு தரப்பினரும் வாதிட்டனர். தாய் தரப்பில் புன்யா நாயர் என்றும் தந்தை தரப்பில் பத்மா நாயர் என்றும் பெயர் சூட்ட வலியுறுத்தினர்.

இந்த வழக்கு விசாரணையை இழுத்தடித்து, நீதிமன்றம் தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதே வேளையில் வழக்கை நிராகரிப்பதன் மூலம் குடும்ப பூசலை தீர்க்காது விடவும் நீதிபதிகளுக்கு மனமில்லை.

கேரள உயர் நீதிமன்றம்
கேரள உயர் நீதிமன்றம்

எனவே தாய் - தந்தைக்கு மாற்றாக நீதிமன்றமே குழந்தைக்கு பெயர் சூட்டும் என நீதிபதிகள் அறிவித்ததோடு, தங்களுக்குள் கலந்து ஒரு பெயரை இறுதி செய்தனர். அதன்படி பெண் குழந்தைக்கு புன்யா பாலகங்காதரன் நாயர் என பெயர் சூட்டி, அதன் பெற்றோரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

கேரள நீதிமன்றங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டுவது இது முதல் முறையும் அல்ல. குறிப்பாக இருவேறு மதங்களுக்கு இடையே காதலித்து மணம்புரிவோர், பின்னர் தங்களுக்குள் முட்டிக்கொண்டு விலகி வாழும்போதோ, விவாகரத்துக்கு தயாராகும்போதோ இவ்வாறு குழந்தை பெயர் பிரச்சினைக்காக நீதிமன்றத்தை நாடுவார்கள்.

அதிலும், தங்கள் தரப்பிலான மதப்பெயர்தான் குழந்தைக்கு வைக்க வேண்டும் என நீதிமன்றத்தை கலங்கடிப்பார்கள். அம்மாதிரி வழக்குகளை கேரள நீதிமன்றம் தொடர்ந்து சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in