தடை நீடிக்கிறது... நட்பு நாடுகளுக்கு 2,000 மெட்ரிக் டன் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி!

வெள்ளை வெங்காயம்
வெள்ளை வெங்காயம்

மூன்று துறைமுகங்களிலிருந்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு குறிப்பிட்ட அளவில் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நேற்று அனுமதி அளித்தது. இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், 'குறிப்பிட்ட துறைமுகங்கள் வழியாக 2,000 மெட்ரிக் டன் வெள்ளைப் வெங்காயம் மொத்த ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், மஹுவாவில் ஏற்றுமதிக்கு கொண்டு செல்லப்படும் வெங்காயம்
குஜராத் மாநிலம், மஹுவாவில் ஏற்றுமதிக்கு கொண்டு செல்லப்படும் வெங்காயம்

வெள்ளை வெங்காயம் மற்றும் அதன் அளவு குறித்து ஏற்றுமதியாளர் குஜராத் அரசாங்கத்தின் தோட்டக்கலை ஆணையரிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, முந்த்ரா துறைமுகம், பிபாவாவ் துறைமுகம் மற்றும் நவா சேவா / ஜே.என்.பி.டி துறைமுகம் ஆகிய 3 துறைமுகங்கள் வழியாக வெள்ளை வெங்காயம் குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

வெங்காயம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. இந்தியாவில் வெங்காயத்தின் ஏற்றுமதி பொதுவாக தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நட்பு நாடுகளுக்கு அவர்களின் கோரிக்கைகளின் பேரில் குறிப்பிட்ட அளவு ஏற்றுமதியை அரசு அனுமதிக்கிறது.

துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி
துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி

டிஜிஎஃப்டி என்பது வர்த்தக அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும். இது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகளைக் கையாள்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, உள்நாட்டில் விநியோகத்தை அதிகரிப்பதற்கும், விலைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் வெங்காய ஏற்றுமதியை அரசாங்கம் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in