திரிபுரா பழங்குடியின பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு... அமித் ஷா முன்னிலையில் முத்தரப்பு ஒப்பந்தம்!

திரிபுரா பிரச்சினைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் ஒப்பந்தம்
திரிபுரா பிரச்சினைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் ஒப்பந்தம்

திரிபுரா மாநில பழங்குடி மக்களின் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வைக் கொண்டுவருவதற்காக முத்தரப்பு ஒப்பந்தம் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

திப்ரா மோத்தா அமைப்பின் தலைவர் பிரத்யோட் தேபர்மா
திப்ரா மோத்தா அமைப்பின் தலைவர் பிரத்யோட் தேபர்மா

திரிபுரா மாநிலத்தில் பழங்குடி மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கோரி, திப்ரா மோத்தா அமைப்பின் தலைவர் பிரத்யோட் தேபர்மா, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருந்து வந்தார். இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து, அவர் டெல்லிக்கு வந்து ஒப்பந்தத்தில் ஈடுபட ஒப்புக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து 'டிப்ரா மோத்தா' அமைப்பு, திரிபுரா மாநில அரசு மற்றும் மத்திய அரசுகளிடையே இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, திரிபுரா மாநிலத்தில் பழங்குடியினரின் வரலாறு, நிலம் மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார மேம்பாடு, கலாச்சாரம், அடையாளம், மொழி போன்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க ஒரு கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும்.

திரிபுரா
திரிபுரா

ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு உகந்த சூழலைப் பராமரிக்க போராட்டங்களை தவிர்க்குமாறு பழங்குடியினர் அமைப்பினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: “முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், அரசு திரிபுராவின் வரலாற்றுக்கு மதிப்பளித்துள்ளது. கடந்த கால தவறுகளை சரிசெய்து, தற்போதைய யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறியுள்ளது.

உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் இனி போராட வேண்டியதில்லை என திரிபுரா பிரதிநிதிகளுக்கு நான் உறுதியளிக்கிறேன். உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதில் இந்திய அரசு இரண்டு படிகள் முன்னேறும்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது, ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் கடந்த கால தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு முன்னேற முடியும். திரிபுராவில் உள்ள பாஜக அரசு இந்த ஒப்பந்தத்தை நோக்கி நேர்மையாக செயல்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ், வடகிழக்கு மாநிலங்களில் 11 அமைதி மற்றும் எல்லை தீர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது” இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

இந்நிகழ்வில் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, அம்மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பிகாஷ் தேபர்மா, திப்ரா மோத்தா அமைப்பின் தலைவர் பிரத்யோட் தேபர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in