அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்... பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்தியது தேர்தல் ஆணையம்!

நவீன செயலி அறிமுகம்
நவீன செயலி அறிமுகம்

வாக்காளர்கள் தங்கள் தகவல்களை அறிந்துகொள்ள, ’ஓட்டர் ஹெல்ப்லைன்’ (VHA) என்ற பிரத்யேக ஆப்பை தேர்தல் ஆணையம் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.

நவீன செயலி அறிமுகம்
நவீன செயலி அறிமுகம்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27. மனுக்களை வாபஸ் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள். ஜூன் ஒன்றாம் தேதியுடன் தேசம் முழுமைக்கும் வாக்குப்பதிவு நிறைவடையும். ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை ஒரே கட்டமாக நடைபெறும்.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

இந்த நிலையில், பொதுத் தேர்தலை வெளிப்படைத் தன்மையுடன் நடத்த மத்திய தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. வாக்காளர்கள் தங்கள் தகவல்களை அறிந்துகொள்ள, ’ஓட்டர் ஹெல்ப்லைன்’ (VHA) என்ற பிரத்யேக ஆப்பை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. வாக்காளர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களும் இதில் அடங்கும்.

இந்த ஆப் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா இல்லையா என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த செயலியை கூகுள் பிளேஸ்டோர் உள்ளிட்ட தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in