டெல்லி பிரகதி மைதானத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள சுரங்கச்சாலையில் இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. போக்குவரத்து நெருக்கடிகளை தீர்க்க டெல்லி நகரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பிரகதி மைதானம் அருகே ரூபாய் 777 கோடி செலவில் புதிதாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
டெல்லி பிரகதி மைதான் சுரங்கச் சாலை அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் கூட இன்னும் இன்னும் முடியாத நிலையில் அதன் மேற்கூறையில் விரிசல் விழுந்து, தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இந்த சுரங்கச் சாலையை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை என்றும், இதை முற்றிலும், சீரமைக்க வேண்டும் எனவும் டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?
அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!
உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்
தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!