மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா... வாட்டத்தில் வட இந்தியா

கொரோனா திரிபு
கொரோனா திரிபு

இடையில் குறைந்திருந்த கொரோனா பரவல் இந்தியாவில் மீண்டும் வேகம் பிடித்திருப்பது, உரிய பாதுகாப்பு மற்றும் தடுப்பு முறைகளை கோரி இருக்கிறது.

2 ஆண்டுகளுக்கு முன்னர் உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்று அபாயத்திலிருந்து, மக்கள் இன்னமும் முழுவதுமாக விடுபடவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் கொரோனா பாதிப்பு அவ்வப்போது எழுந்தடங்கியே வருகிறது. முழுவீச்சிலான தடுப்பூசி நடைமுறைகள் வாயிலாக கொரோனா பரவல் பெருமளவு குறைந்த போதும், போக்குகாட்டும் புதிய திரிபுகள் மக்கள் மத்தியில் பதற்றத்தை எழுப்பி வருகின்றன.

கொரோனா பரவல் எச்சரிக்கை
கொரோனா பரவல் எச்சரிக்கை

இந்த வகையில் இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பநிலையில் தென்படும் மாற்றங்கள் மற்றும் புதிய திரிபுகளின் தலைகாட்டல் ஆகியவை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அது போலவே மேற்குறிப்பிட்ட இதர மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்வு கண்டுள்ளன. கடந்த 15 நாட்களில், டெல்லியில் 459 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய 15 நாட்களில் 191 ஆகவும், அதற்கு முந்தைய 15 நாட்களில் 73 ஆகவும் இருந்தது.

படிப்படியான இந்த எழுச்சிக்கு குறிப்பிடத்தக்க காரணமாக சிலவற்றை மருத்துவ வல்லுநர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அதன்படி, புதிய திரிபுகளின் ஆதிக்கம், காலநிலை மாற்றத்தின் ஊசலாட்டம் ஆகியவற்றோடு குறைந்த சோதனை விகிதங்கள், தடுப்பு எச்சரிக்கைகளில் மக்களின் உதாசீனம் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. கொரோனா திரிபுகளில் ஒமைக்ரான் எக்ஸ்இ, பிஏ.2 ஆகியவை வட இந்தியாவில் தற்போதைய கொரோனா எழுச்சிக்கு காரணமாகி உள்ளன. வட இந்தியாவுடன் ஒப்பிடுகையில் தென்னிந்திய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தணிந்தே காணப்படுகிறது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனைThe Hindu

காய்ச்சல், இருமல்,பலவீனம், உடல் வலி, தலைவலி, மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு உள்ளிட்ட வழக்கமான அறிகுறிகள் தற்போதைய பரவலில் தென்படுகின்றன. பெரும்பாலும் வீடுகளில் தனித்திருத்தல் மற்றும் ஓய்வெடுத்தல் மூலமே குணம்பெறுவது சாத்தியமாகிறது. வெகு சிலருக்கு மட்டுமே மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுகிறது. கொரோனா காரணமாக அச்சுறுத்தும் உயிரிழப்புகள் ஒதுக்கும் அளவுக்கு குறைந்தே காணப்படுகின்றன.

மக்களவைத் தேர்தலுக்கு தேசம் தயாராகி வருகையில், வட இந்தியாவில் கொரோனா பரவல் கணிசமாக உயர்வது, அரசாங்கம் முதல் தனிநபர் கூடுதல் கவனிப்பை கோருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?

அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in