எப்போது கைதாக வேண்டுமென்பதை குற்றவாளிகளே தீர்மானிக்கின்றனர்... மம்தா கட்சியை சாடிய பிரதமர் மோடி!

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

மேற்கு வங்கத்தில், எப்போது கைதாக வேண்டும் என்பதை குற்றவாளிகளே தீர்மானிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை துவங்கி வைப்பதற்காக அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள நடியா மாவட்டம், கிருஷ்ணநகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: "திரிணமூல் காங்கிரஸ் அரசு மேற்கு வங்கத்தையும், அதன் மக்களையும் முற்றிலும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. மேற்கு வங்க மக்களால் மீண்டும் மீண்டும் ஆட்சி அதிகாரம் தரப்பட்ட போதிலும், திரிணமூல் அரசு கொடுங்கோன்மை மற்றும் துரோகத்தின் அடையாளமாக மாறிவிட்டது.

திரிணமூல் காங்கிரஸ் என்றால் துரோகம், ஊழல் மற்றும் குடும்ப ஆதிக்கம் என்று பொருள். இந்த முறை பாஜக-வுக்கு வாக்களியுங்கள். மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் இங்கு கூடியிருப்பதைப் பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணி, 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.

கிருஷ்ணா நகரில் பேரணி சென்ற பிரதமர் மோடி
கிருஷ்ணா நகரில் பேரணி சென்ற பிரதமர் மோடி

தாய்மார்களும், சகோதரிகளும் நீதிக்காக இங்கு மன்றாடினர். ஆனால் திரிணமூல் காங்கிரஸ் அரசு, அவர்களுக்கு செவிசாய்க்கவில்லை. இப்போது மேற்கு வங்கத்தில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் கண்ணீர் சிந்துகின்றனர். மாநிலத்தில் நிலைமை என்னவென்றால் இங்கே குற்றவாளிகளே எப்போது கைது செய்யப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.

மேற்கு வங்க பயணத்தில் பிரதமர் மோடி, தாமோதர்-மொஹிஷிலா ரயில் பாதையை இருவழிப்பாதையாக்குவது, ராம்பூர்ஹாட் - முராராய் இடையே 3வது பாதை, பஜார்சாவ்-அசிம்கஞ்ச் ரயில் பாதையை இருவழிப்பாதையாக்குவது, அசிம்கஞ்ச் - முர்ஷிதாபாத்தை இணைக்கும் புதிய பாதையை நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். புருலியா மாவட்டம், ரகுநாத்பூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாம் கட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in