பொது சிவில் சட்டம் ஏற்கெனவே உள்ள சட்டத்தை வெட்டி ஒட்டியுள்ளது: காங்கிரஸ் விமர்சனம்

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம்

உத்தராகண்டில் பொது சிவில் சட்ட மசோதா ஏற்கெனவே உள்ள சட்டத்தின் நகலை வெட்டி, ஒட்டப்பட்டுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

உத்தராகண்ட் சட்டப் பேரவையில் பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் லிவ்-இன் ரிலேஷனை பதிவு செய்வது கட்டாயம். அதனை மீறுவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை, 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் லிவ்-இன் ரிலேஷனை பதிவு செய்ய பெற்றோரின் ஒப்புதல் பெற வேண்டும் ஆகிய விதிகள் இடம்பெற்றுள்ளன.

உத்தராகண்ட் சட்டப் பேரவை கூட்டம்
உத்தராகண்ட் சட்டப் பேரவை கூட்டம்

அதே வேளையில் இந்த சட்டம் பழங்குடியினருக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது சிவில் சட்ட மசோதா மீதான விவாதம் இன்று மீண்டும் தொடங்கியது. எதிர்க்கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த மசோதாவை சபையின் தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்கும் திட்டத்தை முன்வைத்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொது சிவில் சட்ட மசோதா விதிகளை விரிவாக ஆராய வேண்டும் என்றும், அதன் மூலமே சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன் குறைபாடுகளை அகற்ற முடியும் என்றும் வலியுறுத்தினர்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் புவன் சந்திர காப்ரி (காங்கிரஸ்) விவாதத்தில் பேசுகையில், "முன்மொழியப்பட்ட மசோதாவில் லிவ்-இன் ரிலேஷனை பதிவு செய்வதற்கும், 21 வயதுக்கு உட்பட்ட லிவ்-இன் ரிலேஷனை பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற விதிகள் இளைஞர்களின் தனியுரிமையை மீறுவதாகும்.

புவன் சந்திர காப்ரி
புவன் சந்திர காப்ரி

திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்தல், குழந்தைத் திருமணத்துக்கு தடை மற்றும் குறைந்தபட்ச திருமண வயது போன்ற பல விதிகள் உள்ளன. இதில் புதிதாக எதுவும் இல்லை. யுசிசி வரைவைத் தயாரிக்க 20 மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த சட்டங்களின் நகலை வெட்டி, ஒட்டியுள்ளதாக மட்டுமே தெரிகிறது" என்று கூறினார்.

யுசிசி மசோதா முஸ்லிம்களின் மத உரிமைகளை குறைப்பதாக லக்ஸார் எம்எல்ஏ ஷாஜாத் குற்றம் சாட்டினார். அவர் பேசுகையில், “பெற்றோரின் சொத்தில் மகன்களுக்கும் மகள்களுக்கும் சமமான பரம்பரை உரிமை என்பது, பெண் சிசுக்கொலை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in