இந்தியா - அமெரிக்கா அதிர்ச்சி... இலங்கை கடற்பகுதியில் ஆய்வைத் தொடங்கியது சீனக் கப்பல்!

சீனக் கப்பல் ’ஷி யான் 6’
சீனக் கப்பல் ’ஷி யான் 6’

இந்தியா மற்றும் அமெரிக்காவின் அதிர்ச்சிக்குரிய நிகழ்வாக, சீனக் கப்பல் ’ஷி யான் 6’ தனது ஆய்வு நடவடிக்கைகளை, இலங்கை கடற்பகுதியில் இன்று தொடங்கியது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஏகபோகம் அதிகரித்து வருகிறது. தென்சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்கி பெருமளவு பெருங்கடல் பிராந்தியத்தை தனது இறையாண்மைக்குரிய ஆளுகையாக சீனா அறிவித்தது. இதற்கு எதிரான அண்டை தேசங்களின் எச்சரிக்கைகள் மற்றும் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவற்றை சீனா உதாசீனம் செய்தது.

ஷி யான் 6
ஷி யான் 6

தென்சீனக் கடல் பரப்பை வளைத்ததன் மூலம் அண்டை தேசங்கள், கடல் வளங்கள் முதல் கடல் போக்குவரத்து வரை உரிமை கோர முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளன. சர்வதேச கடல் போக்குவரத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருப்பதாக, அந்த பிராந்தியத்தில் உலா வரும் அமெரிக்காவின் எதிர்ப்பும் சீனாவுக்கு எதிராக திரும்பியுள்ளது.

அடுத்ததாக இந்திய பெருங்கடலை குறிவைத்திருக்கும் சீனா, அங்கே கடல் ஆய்வு என்ற பெயரில் இந்தியாவை உளவு பார்க்கவும், இந்திய பெருங்கடல் வளங்கள் மற்றும் போக்குவரத்தை ஆராயவும் செய்து வருகிறது. இதற்காக இலங்கை முதல் மாலத்தீவுகள் வரை தனது கடன் வலையில் சீனா வீழ்த்தியுள்ளது.

தற்போது இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் ’ஷி யான் 6’ என்ற ஆய்வுக் கப்பல் தனது 2 நாள் கடல் ஆய்வினை இன்று தொடங்கியுள்ளது. இலங்கையின் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் இந்த ஆய்வு இடம்பெறும் என இலங்கை தெளிபடுத்தி உள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் ஐயத்துக்குரிய இந்த ’ஷி யான் 6’ கப்பல், 2020 டிசம்பரில் சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. புவி இயற்பியல் ஆய்வில் கவனம் செலுத்தும் நாட்டின் முதல் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல் என்று சீனா கூறுகிறது. இந்த கப்பலின் தற்போதை ஆய்வு 80 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.13 ஆராய்ச்சி குழுக்கள் கூடி 12,000 கடல் மைல்கள் பயணித்து, 28 அறிவியல் ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இலங்கை வந்த சீனாவின் உளவு கப்பல்
கடந்த வருடம் இலங்கை வந்த சீனாவின் உளவு கப்பல்

ஆனால் அத்தகைய ஆய்வுகளின் பின்னணி குறித்தும், அவை எந்தளவுக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரானது என்பது குறித்தும் அமெரிக்காவும், இந்தியாவும் கவலை கொண்டுள்ளன.

கடந்த ஆண்டு, விண்கலத்தை வேவு பார்க்கும் சீனக் கப்பல் ஒன்று, இந்தியாவில் பாதுகாப்பு சார்ந்த கவலைகளை வெகுவாக எழுப்பியது. இந்தியாவின் அழுத்ததை அடுத்து, தனது கடற்பரப்பில் இருக்கும்போது சீனாவின் ஆய்வுக்கப்பல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!

கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!

பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு... தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து... 'டெரர்' வாலிபரிடம் விசாரணை

சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!

அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in