அடுத்த சுற்று பேசலாம் வாங்க... போராடும் விவசாயிகளுக்கு அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைப்பு!

மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா
மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா

பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிப்பதற்காக ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் டெல்லி சலோ போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி 13-ம் தேதி டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்ல முயன்றனர்.

இந்த நிலையில், மாநில எல்லைகளில் விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் செல்ல தொடங்கியதால் போலீஸாரும், துணை ராணுவ படையினரும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அவர்களைத் தடுத்து வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

ஆனால், போலீஸாரின் தடையை உடைத்து விவசாயிகள் தொடர்ந்து டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனிடையே விவசாய சங்கத்தினர் மத்திய அரசுடன் கடந்த 8, 12, 16, மற்றும் 18 ஆகிய தேதிகளில் நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

இதனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். நான்காம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு, பருப்பு வகைகள், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்படும் என சில முன்மொழிவுகளை அளித்தது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இதற்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஆனால், மத்திய அரசு முன்மொழிந்த திட்டங்களை விவசாயிகள் நிராகரித்துள்ளனர். இதன் காரணமாக மீண்டும் டெல்லி நோக்கி பேரணியை நடத்த உள்ளதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் தடுப்புகளைச் சேதப்படுத்தி முன்னேற முயன்றவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறுகையில், ”4வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னர், குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கை, பயிர் பல்வகைப்படுத்துதல், பயிர் கழிவுகளை எரித்தல், வழக்குகள் போன்ற அனைத்து பிரச்சினைகள் குறித்தும் 5வது சுற்று பேச அரசு தயாராக இருக்கிறது. விவசாய தலைவர்களுக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நான் அழைப்பு விடுக்கிறேன். அமைதியை பேணுவதற்கு இது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


பணிகள் நிறைவு... கருணாநிதி நினைவிடத்தை 26-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்!

ரூ.3000 கோடி ’மியாவ் மியாவ்’ போதைப்பொருள் மீட்பு... டெல்லி - புனே போதை வலைப்பின்னலில் கிறுகிறுத்த போலீஸார்

யூடியூபில் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்... தாயும், சேயும் பலியான சோகம்!

ரம்ஜான் உணவுத் திருவிழாவை தடை செய்யுங்க... பெங்களூரு தமிழர்கள் திடீர் போர்க்கொடி!

தீபிகா-ரன்வீர் ஜோடிக்கு வாரிசு வந்தாச்சு... தீயாய் பரவும் தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in