யூடியூபில் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்... தாயும், சேயும் பலியான சோகம்!

பாலக்காடு
பாலக்காடு

கேரளாவில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளுமாறு கணவர் வற்புறுத்திய நிலையில், பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள வெஞ்சாமரமூடு பகுதியைச் சேர்ந்தவர் நயாஸ். இவரது மனைவி சமீரா பீவி (36). இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நான்காவதாக சமீரா கர்ப்பமடைந்தார். ஏற்கெனவே பிறந்த மூன்று குழந்தைகளும், அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருந்ததால், நான்காவது குழந்தைக்கு மருத்துவமனைக்கு செல்ல நயாஸ் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளுமாறு அவர் சமீராவை வற்புறுத்தி வந்துள்ளார்.

கர்ப்பிணி
கர்ப்பிணி

சமீரா கர்ப்பமாக இருப்பதை அறிந்து அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக மருத்துவ பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். அவர்கள் அங்கு வந்து சமீராவை பார்வையிட முயன்ற போது, அவர்களைத் தடுத்து நிறுத்திய நயாஸ், அவர்களை விரட்டியும் உள்ளார்.

இந்நிலையில் சமீராவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டு வலியில் துடித்துள்ளார். அப்போதும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நயாஸ் மறுத்துள்ளார். இதனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சமீரா மயங்கினார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த மருத்துவப் பணியாளர்கள், உடனடியாக சமீராவையும், குழந்தையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் இருவரும் இறந்து வெகு நேரமாகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். அத்துடன் நயாஸை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பாலக்காடு அரசு மருத்துவமனை
பாலக்காடு அரசு மருத்துவமனை

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “பலமுறை நயாஸிடம் சமீராவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினோம். ஆனால், அவர் அதை கேட்கவில்லை. யூடியூபில் வீடியோக்களை பார்த்து சுகப்பிரசவம் மேற்கொள்ள முயற்சி எடுப்பதாக அவர் தெரிவித்தார்.” என்றனர்.

சமீரா நயாஸின் இரண்டாவது மனைவி ஆவார். நயாஸின் முதல் மனைவி மூலமாக பிறந்த ஒரு மகள் தற்போது அக்குபஞ்சர் பயின்று வருவதால் அவர் சமீராவுக்கு ரத்தப்போக்கின் போது அக்குபஞ்சர் சிகிச்சை அளித்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாகவும் போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசவத்தின் போது தாயும், சேயும் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகை நயன்தாராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது... குவியும் வாழ்த்து!

முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உடைகள்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை கடந்து செல்ல விவசாயிகள் அதிரடி!

பெற்றோர்களின் கவனத்திற்கு... மார்ச்.3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்...

கோர விபத்து... லாரி - ஆட்டோ மோதி 8 பேர் பலியான சோகம்!

மார்ச் 31 வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in