தீபிகா-ரன்வீர் ஜோடிக்கு வாரிசு வந்தாச்சு... தீயாய் பரவும் தகவல்!

தீபிகா படுகோனே, ரன்வீர்...
தீபிகா படுகோனே, ரன்வீர்...

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி நடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் ஜோடி. இவர்களுக்குத் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், தீபிகா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தீபிகா படுகோனே, ரன்வீர்
தீபிகா படுகோனே, ரன்வீர்

திரைத்துறையில் பிரபலங்களின் காதல், திருமணம், அவர்களது பிரேக்கப், விவாகரத்து உள்ளிட்ட செய்திகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்க்கும். அப்படி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் விஷயம் பாலிவுட் ஜோடி தீபிகா படுகோனே- ரன்வீர் சிங்கின் குழந்தை விஷயம்தான்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் இவர்களது திருமணம் நடந்தது. திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கடந்திருக்கிறது. இருவருமே படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், ’எப்போது குழந்தை?’ என்ற கேள்வியை இவர்கள் தொடர்ந்து எதிர்கொண்டார்கள். இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் கொடுக்கும் விதமாக நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி இப்போது வெளியாகியுள்ளது.

பாஃப்டா விருது வழங்கும் விழாவில் தீபிகா...
பாஃப்டா விருது வழங்கும் விழாவில் தீபிகா...

சமீபத்தில் இந்த ஆண்டிற்கான பாஃப்டா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்த நடிகை தீபிகா தனது வயிற்றுப் பகுதியை பெரும்பாலும் மறைத்தபடியே இருந்தார். இதைப் பார்த்துவிட்டு, தீபிகாவின் வயிற்றுப் பகுதி பார்ப்பதற்கு கர்ப்பமாக இருப்பது போலவே தோற்றமளிப்பதாக ரசிகர்கள் தங்கள் ஊகங்களை இணையவெளியில் பரப்பினர்.

பாலிவுட் ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டு வருகின்றன். ஆனால், தீபிகா-ரன்வீர் ஜோடி இந்தச் செய்தி குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகை நயன்தாராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது... குவியும் வாழ்த்து!

முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உடைகள்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை கடந்து செல்ல விவசாயிகள் அதிரடி!

பெற்றோர்களின் கவனத்திற்கு... மார்ச்.3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்...

கோர விபத்து... லாரி - ஆட்டோ மோதி 8 பேர் பலியான சோகம்!

மார்ச் 31 வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in