ரம்ஜான் உணவுத் திருவிழாவை தடை செய்யுங்க... பெங்களூரு தமிழர்கள் திடீர் போர்க்கொடி!

பெங்களூரு ரம்ஜான் உணவுத் திருவிழா
பெங்களூரு ரம்ஜான் உணவுத் திருவிழா

பெங்களூரு நகரில் நடைபெறும் ‘ரம்ஜான் உணவுத் திருவிழா’வை தடை செய்ய வேண்டும் என பெங்களூரு தமிழர்கள் தரப்பில் இருந்து திடீர் கோரிக்கை எழுந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரின் மக்கள் தொகை சுமார் ஒரு கோடியை தாண்டி உள்ளது. இதில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமிழர்கள் ஆவர். பெங்களூரு நகரின் சிவாஜி நகர், அல்சூர், பிரேசர் டவுன், கலாசிபாளையம், சாம்ராஜ்பேட்டை, கே.பி.அக்ரஹாரம், காந்திநகர், ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பெங்களூரு நகரில் மட்டும் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

பெங்களூரு ரம்ஜான் உணவுத் திருவிழா
பெங்களூரு ரம்ஜான் உணவுத் திருவிழா

இந்நிலையில், இங்கு அவ்வப்போது தமிழர்களின் பாரம்பரிய உணவு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பிரேசர் டவுனில் ஒவ்வொரு ஆண்டும் எம்.எம்.சாலை, மசூதி சாலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரம்ஜான் உணவு திருவிழா நடைபெறுவது வழக்கம். வெகு விமர்சையாக நடைபெறும் இந்த திருவிழாவின்போது, ரம்ஜான் காலத்தில் இஸ்லாமியர்கள் அருந்தும் வெவ்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் விற்பனை செய்யப்படும்.

இந்த உணவு திருவிழாவில் பெங்களூரு நகரில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வித்தியாசமான உணவு பதார்த்தங்களை சுவைத்து மகிழ்வர். இந்நிலையில் இந்த ரம்ஜான் உணவு திருவிழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என பிரேசர் டவுன் தமிழர்கள் திடீர் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெங்களூரு ரம்ஜான் உணவுத் திருவிழா
பெங்களூரு ரம்ஜான் உணவுத் திருவிழா

இது தொடர்பாக புலிகேசி நகர் எம் எல் ஏ-வான சீனிவாசாவிடம் பிரேசர் டவுன் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் மனு ஒன்றை அளித்துள்ளனர். சுமார் 3,500 பேர் கையெழுத்திட்டுள்ள அந்த மனுவில், ‘பிரேசர் டவுனில் மார்ச் 12-ம் தேதி துவங்க உள்ள ரம்ஜான் உணவு திருவிழாவை தடை செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அச்சங்கத்தினர், கடந்த ஆண்டே ரம்ஜான் உணவுத் திருவிழாவை நிறுத்த வேண்டும் என பிரச்சாரத்தை தொடங்கியதாக தெரிவித்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகவே இந்த உணவு திருவிழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரம்ஜான் உணவுத் திருவிழா காரணமாக, சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுவதோடு, சுகாதாரமற்ற உணவு தயாரிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, குழந்தைகள் நோய் தொற்றுக்கு உள்ளாவதாகவும், கடந்த ஆண்டு சிலிண்டர் ஒன்று வெடித்த போது, ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளே நுழையக்கூட முடியாத அளவுக்கு கூட்டம் அதிகரித்து காணப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதி இந்த உணவுத் திருவிழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என பிரேசர் டவுன் தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர். பெங்களூரு தமிழர்களின் இந்தத் திடீர் கோரிக்கை பெங்களூரு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகை நயன்தாராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது... குவியும் வாழ்த்து!

முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உடைகள்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை கடந்து செல்ல விவசாயிகள் அதிரடி!

பெற்றோர்களின் கவனத்திற்கு... மார்ச்.3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்...

கோர விபத்து... லாரி - ஆட்டோ மோதி 8 பேர் பலியான சோகம்!

மார்ச் 31 வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in