பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிப்பு... வெளியாகிறது பொருளாதார வளர்ச்சிக்கான வெள்ளை அறிக்கை!

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, பாஜக பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டுக்கு முந்தைய மற்றும் பிந்தைய பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவை, இவ்வாண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தலுக்கான முன்தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் உத்தேச தேர்தல் தேதியை அறிவித்து, தேர்தல் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி

அரசியல் கட்சியினரும் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுப்பது, கூட்டணிகளை இறுதி செய்வது, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 31-ம் தேதி இந்த அரசின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாள் அமர்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ம் தேதி வெள்ளிக் கிழமையுடன் நிறைவடைவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு வருகிற சனிக்கிழமை வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

வரும் சனிக்கிழமை அன்று, பாஜக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2014-ம் ஆண்டுக்கு முந்தைய மற்றும் பிந்தைய, நாட்டின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக மத்திய அரசு இந்த அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in