அமலாக்கத்துறையின் அடுத்த மூவ்... டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சம்மன்!

டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்
டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் விசாரணை நடத்த, அம்மாநில அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை

டெல்லியில் கடந்த 2021-22-ம் ஆண்டில் மதுபான கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்களான அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, எம்.பி-சஞ்சய் சிங் உள்ளிட்ட பலர் விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21-ம் தேதி டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. இதனைக் கண்டித்து ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கவிதா, சஞ்சய் சிங்
கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கவிதா, சஞ்சய் சிங்

இந்நிலையில் இந்த வழக்கில் டெல்லி போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள கைலாஷ் கெலாட்டுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் தேர்தல் நேரத்தில் அக்கட்சிக்கு மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதே வழக்கில் ஏற்கெனவே, தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in