சென்னைவாசிகளே உஷார்... சர்க்கரை நோய்க்கு ஆளாக்கும் காற்று மாசு; புதிய ஆய்வில் நிரூபணம்!

நீரிழிவுக்கு ஆளாக்கும் காற்று மாசு
நீரிழிவுக்கு ஆளாக்கும் காற்று மாசு

சென்னை மற்றும் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவின் அபாயத்தை அதிகரிப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. காற்று மாசுவில் அடங்கியிருக்கும் ’பிஎம் 2.5’ துகள்கள், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு காரணமாவது இந்த ஆய்வில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாள்பட்ட நோய்கள் பற்றிய ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு 2010-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ளது. இது இந்தியாவில் பிஎம் 2.5 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்கான நேரடி தொடர்பைப் பரிந்துரைக்கும் முதல் ஆய்வுகளில் ஒன்றாகும்.

காற்று மாசு
காற்று மாசு

பிஎம் 2.5 என்பது சல்பேட்டுகள், நைட்ரேட்டுகள், கன உலோகங்கள் மற்றும் கருப்பு கார்பன் போன்ற பொருட்கள் அடங்கிய துகள்கள் ஆகும். இவை இரத்த நாளங்களின் உட்புறம் படிந்து தமனிகளில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் இந்த நுண்ணிய துகள்கள் கொழுப்பு செல்களுக்குள் குவிந்து, வீக்கத்தைத் தூண்டி, இதயத் தசையை நேரடியாகப் பாதிக்கவும் செய்யும். இதனால், நீரிழிவு மட்டுமன்றி இதய பாதிப்புக்கும் இவை வித்திடக்கூடும்.

2010 - 2017 ஆண்டுகளுக்கு இடையில் டெல்லி மற்றும் சென்னையின் 12,000 ஆண்கள் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் இரத்த சர்க்கரை அளவு மற்றும் காற்று மாசு மாதிரிகள் இந்த ஆய்வின் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இரண்டு நகரங்களிலும் பிஎம் 2.5 ஆண்டு சராசரி அளவில் ஒவ்வொரு 10 கன மைக்ரோகிராம் அதிகரிப்புக்கும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து 22 சதவீதம் அதிகரிப்பது தெரிய வந்தது.

டெல்லி காற்று மாசு
டெல்லி காற்று மாசு

டைப் 2 நீரிழிவு நோய்க்கு உணவுப் பழக்கம் மற்றும் உடல் பருமன் முக்கிய காரணங்களாக இருப்பதை அறிவோம். இவற்றோடு காற்று மாசுபாடும் ஒரு காரணியாக மாறி உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால், நீரிழிவு நோயின் தீவிரம் அதிகரித்து வருவதன் மத்தியில் இந்த புதிய காரணி மக்கள் மத்தியில் திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!

ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!

பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!

வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in