என்னையும் விட்டு விடுங்கள்... கம்பீர் வரிசையில் விலகிய மற்றொரு எம்.பி; அதிர்ச்சியில் பாஜக!

பாஜக எம்பி-ஜெயந்த் சின்ஹா
பாஜக எம்பி-ஜெயந்த் சின்ஹா
Updated on
1 min read

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரை தொடர்ந்து தன்னையும் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்குமாறு பாஜக எம்.பி ஜெயந்த் சின்ஹா கட்சித் தலைமைக்கு தெரிவித்துள்ளார்.

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்

பாஜக எம்.பியும், கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், கிரிக்கெட் பணிகளில் தான் கவனம் செலுத்தும் வகையில், தன்னை அரசியல் பணிகளில் இருந்து விடுவிக்குமாறு கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு வேண்டுகோள் விடுத்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் கம்பீர் வரிசையில் மற்றொரு பாஜக எம்பி-யான ஜெயந்த் சின்ஹாவும் தேர்தல் பணியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் ஜெயந்த் சின்ஹா வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் முயற்சிகளில் கவனம் செலுத்துவதற்காக, நேரடி தேர்தல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கேட்டுக்கொண்டேன். நிச்சயமாக, பொருளாதாரம் மற்றும் நிர்வாகம் தொடர்பாக கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன்.

கடந்த 10 ஆண்டுகளாக பாரத் மற்றும் ஹசாரிபாக் (ஜார்கண்ட்) மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைமை எனக்கு வழங்கிய பல வாய்ப்புகளால் நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!" என குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் பணி, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது என பல்வேறு காரணங்களை கூறி, தேர்தல் பணிகளில் இருந்து எம்.பி-க்கள் விலகுவதால் பாஜக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in