ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியாகும்? - கேஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

பஞ்சாப்பில் மக்களவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் பட்டியல் 2 முதல் 4 நாட்களுக்குள் வெளியாகும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

ஜலந்தரில் சுகாதார நிலையத்தை திறந்த வைத்த அர்விந்த் கேஜ்ரிவால்
ஜலந்தரில் சுகாதார நிலையத்தை திறந்த வைத்த அர்விந்த் கேஜ்ரிவால்

மக்களவைத் தேர்தல் நெருங்கிய நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் அக்கட்சி ஆளும் மற்றொரு மாநிலமான பஞ்சாப்பில் தனித்து போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் இன்று அங்கு சென்றார்.

ஜலந்தரில் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது, வேட்பாளர்கள் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கேஜ்ரிவால், “வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. அடுத்த 2 முதல் 4 நாட்களுக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்” என்றார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், "அரவிந்த் கேஜ்ரிவால் நாட்டின் அரசியலில் ஒரு புரட்சியாகப் பார்க்கப்படுகிறார். அவர் புதிதாக ஏதாவது செய்ய விரும்புகிறார். இதன் காரணமாக பல கட்சிகள் தங்கள் திட்டங்களையும், தேர்தல் அறிக்கைகளையும் மாற்றியுள்ளன. அவர்கள் மருத்துவமனைகள், பள்ளிகளைப் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால் இதற்கு முன்பு அவர்கள் இதனை செய்யவில்லை. அர்விந்த் கேஜ்ரிவால் தனது உத்தரவாதங்களைப் பற்றி பேசினார். தற்போது அவர்கள் 'மோடி உத்தரவாதம்' என சொல்லத் தொடங்கியுள்ளனர்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in