ஷாக்... இந்தியாவில் 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு முதலிடம்!

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 115 மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் சென்னையில் அதிகபட்சமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கடந்த 2023 பிப்ரவரி 12-ம் தேதி மாணவர் சோலங்கி உயிரிழந்தார். இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் எத்தனை பேர் இறந்தர் என்ற தகவலை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவரும், ஐஐடி முன்னாள் மாணவர் ஆதரவுக்குழு நிறுவனருமான தீரஜ் சிங் மனு தாக்கல் செய்தார்.

ஆர்டிஐ
ஆர்டிஐ

இதன்படி அவர் பெற்ற விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த 2005 முதல் 2024-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னை ஐஐடியில் அதிகபட்சமாக 26 இறப்புகள் ஏற்படுள்ளன. ஐஐடி கான்பூரில் 18 பேரும், ஐஐடி காரக்பூரில் 13 பேரும், ஐஐடி மும்பையில் 10 பேரும் உயிரிழந்ததாக ஆர்டிஐயில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் உயர்கல்வித் துறை, முதலில் எனது விண்ணப்பத்தை நிராகரித்து, தனிப்பட்ட நிறுவனங்களுக்கு தனித்தனி ஆர்டிஐ தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொண்டது. மேல்முறையீட்டிற்குப் பிறகு, அனைத்து ஐஐடிகளுக்கும் தரவைப் பகிருமாறு அமைச்சகம் உத்தரவிட்டது, ”என்று தீரங் சிங் கூறினார்.

இதன்படி எட்டு மாதங்களுக்குள், 23 ஐஐடிகளில் 13 மட்டுமே தீரங் சிங் கேட்ட தகவல்களைத் தந்தன. இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 2005ஆம் ஆண்டு முதல் இதுவரை 115 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 98 இறப்புகள் கல்லூரி வளாகத்தில் நடந்துள்ளன. இதில் 17 பேரின் உயிரிழப்பு ஐஐடி வளாகத்திற்கு வெளியே நடந்துள்ளன. இறந்தவர்களில் 56 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

மேலும் இதுதொடர்பாக தீரஜ் சிங் கூறுகையில், "நாட்டின் முன்னணி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளதை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க ஐஐடி கல்வியை மேம்படுத்துவது அவசரத் தேவையாக உள்ளது" என்றார்.

சோலங்கியின் மரணத்திற்குப் பிறகு பல்வேறு ஐஐடி மாணவர் அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பதிலளித்தவர்களில் 61 சதவீதம் பேர் மாணவர் இறப்புகள் கல்வி மனஅழுத்தத்தால் ஏற்பட்டதாக கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து வேலைப் பாதுகாப்பின்மை என 12 சதவீதம் பேர், குடும்பப் பிரச்சனைகள் காரணமான 10 சதவீதம் பேர், துன்புறுத்தல்கள் காரணமாக 6 சதவீதம் பேரும், மற்ற காரணங்களுக்காக 11 சதவீத மாணவர்களும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...
உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in