அதிர்ச்சி... 3,00,000 டன் தானியங்களை அழித்தது ரஷ்யா; வெளியான பகீர் குற்றச்சாட்டு!

உக்ரைன் படை
உக்ரைன் படை

போரில், சுமார் 3,00,000 டன்  தானியங்களை ரஷ்யா அழித்திருப்பதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 20வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த போர் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா தனது தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. இதனால் உக்ரைனில்  பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய  தானிய ஏற்றுமதி முற்றிலுமாக தடைபட்டது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு ஐக்கிய நாடுகள் சபை முதல் பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தது. 

இதற்கிடையில் ரஷ்யாவின் தடையை மீறி உக்ரைன் கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை சமீபத்தில் உக்ரைன் அரசு தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஜூலை முதல் தற்போது வரை  சுமார் 3,00,000 லட்சம் டன் உக்ரைனிய தானியங்களை ரஷ்யா அழித்திருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

போர் வீரர்கள்.
போர் வீரர்கள்.

ரஷ்யா தானிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பிறகு, இதுவரை 17 மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. அதில்  மொத்தம் 3,00,000 லட்சம் டன் தானியங்களை ரஷ்யா அழித்திருப்பதாகவும், உக்ரைனின் மறுசீரமைப்பு துணை பிரதமர் ஒலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் 25 தானியக் கப்பல்கள் உக்ரைன் உருவாக்கிய தற்காலிக கருங்கடல் வழிப்பாதைக்குள் நுழைந்துள்ளது. அவற்றில் 21 கப்பல்கள் ஏற்றுமதிக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் பொருளாதாரம் சற்று மேம்படும் என்று உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in