பிரதமர் மோடி நாளை தொடங்கி அமீரகத்தில் 2 நாள் பயணம்; மைல்கல் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

பிரதமர் மோடி தனது 2015-ம் ஆண்டு அமீரக விஜயத்தின்போது...
பிரதமர் மோடி தனது 2015-ம் ஆண்டு அமீரக விஜயத்தின்போது...

நாளை தொடங்கும் இரு நாள் அமீரக விஜயத்தை முன்னிட்டு, இந்து கோயில் திறப்புக்கு அப்பால், பிரதமர் மோடி மேற்கொள்ளும் இரு தரப்பிலான மைல்கல் ஒப்பந்தங்களும் கவனம் பெற இருக்கின்றன.

பிரதமர் மோடி பிப்ரவரி 13 அன்று தொடங்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைப்பதற்கும் அப்பால், அமீரகத்தில் மோடி மேற்கொள்ளும் இருதரப்பு ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அமீரக மற்றும் இந்திய தலைவர்களின் சந்திப்பு - கோப்பு படம்
அமீரக மற்றும் இந்திய தலைவர்களின் சந்திப்பு - கோப்பு படம்

2015-ம் ஆண்டுக்குப் பிறகு மோடியின் ஏழாவது அமீரகப் பயணம் இதுவாகும். பிரதமர் மோடியும் அல் நஹ்யானும் இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மையை மேலும் ஆழமாக்குவது, வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது ஆகியவை குறித்தும் விவாதிக்க இருக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் 2015-ம் ஆண்டின் வருகையுடன், அமீரகத்துக்கான இந்தியப் பிரதமரின் 34 ஆண்டு இடைவெளி முடிவுக்கு வந்தது. மேலும் இருதரப்பு உறவில் ஒரு புதிய அத்தியாயமும் தொடங்கியது. இந்த உறவு விரைவாக வளர்ந்து, மூன்று முக்கிய ஒப்பந்தங்களுக்கு வழி செய்தது. இருதரப்பு முதலீட்டு மற்றும் பொருளாதாரம் சார்ந்து, 2017, 2022 மற்றும் 2024 என அவை முக்கியத்துவம் பெற்றன.

இந்தியா - அமீரகம் இடையிலான இருதரப்பு உறவு வலுவானதாகவும், வர்த்தக உறவுகள் ஆழமானதாகவும் மாறி உள்ளன. மே 1, 2023 அன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி, அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை இந்தியாவின் மூன்றாவது மற்றும் நான்காவது பெரிய வர்த்தக பங்காளிகளாக மாறி உள்ளன.

அமீரகம் - இந்தியா இடையிலான முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமீரகம் - இந்தியா இடையிலான முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மேலும், 3.5 பில்லியன் டாலர் முதலீட்டில் இந்தியாவிற்கான நான்காவது பெரும் ஆதாரமாக அமீரகம் இப்போது மாறியுள்ளது. இது தவிர விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, கல்வி ஆகியவற்றிலும் இரு நாடு இடையே புதிய ஒத்துழைப்புகள் அரங்கேற இருக்கின்றன. முன்னதாக அமீரகத்தின் முதலீட்டு அமைச்சகம் இந்தியாவுடனான 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதப்படுத்துதல் மற்றும் சுகாதாரத் துறைகளில் இருதரப்பு முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாக இவை கொண்டுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்... மீண்டும் விவாதத்துக்கு வந்த ‘விதை நீக்கம்’ தண்டனை

“வந்துட்டேன்னு சொல்லு...” சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in