அதிர்ச்சி... சாலையில் சென்ற காரின் மீது மோதிய விமானம்; வைரலாகும் வீடியோ!

விமானம், கார் மோதி விபத்து
விமானம், கார் மோதி விபத்து

அமெரிக்காவில் சாலையில் சென்ற காரின் மீது விமானம் மோதியதில் கார் ஓட்டுநர் காயமடைந்தார்.

அமெரிக்காவில் டெக்ஸாஸில் உள்ள மிட்லேண்ட் என்ற இடத்தில் இருந்து டல்லஸ் நோக்கி சிறிய ரக விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அதன் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமானி டல்லஸ் புறநகர் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க முயன்றார்.

அப்போது அதிவேகமாக வந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியது. அப்போது விமான நிலையை எல்லையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த வேலியை உடைத்துக் கொண்டு சாலையின் பக்கம் திரும்பியது. அப்போது, விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்தது.

இதனால், தரையில் தாறுமாறாக சறுக்கியபடி சென்ற விமானம். சாலையில் வந்து கொண்டிருந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட விமான நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று, இந்த விபத்தில் காயமடைந்த கார் ஓட்டுநர் மற்றும் விமானி ஆகியோரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானமும், காரும் மோதி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in