பாதுகாப்பு சபையில் பாலஸ்தீனம்... ஐ.நா வில் தீர்மானம் நிறைவேற்றம்!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்பு கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்க கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியுள்ளது.

ஐநா சபை
ஐநா சபை

பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உருவாக்கப்பட்டது. அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டுத் தடைகள் ஏற்படுத்துதல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரங்கள் இந்த சபைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களை தனது தீர்மானங்கள் மூலமாக  ஐநா பாதுகாப்பு சபை நிலைநாட்டுகிறது. 

இந்த சபையில் 193 நாடுகள் இதுவரை உறுப்பினராக உள்ளது. இதில் பாலஸ்தீனம்  கடந்த 2012-ம் ஆண்டு முதல் உறுப்பினர் அல்லாத பார்வையாளராக மட்டுமே இருந்து வந்தது. 193 உறுப்பினர்களை கொண்ட ஐநா சபையில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் வரைவுத் தீர்மானம் கடந்த மாதம்  கொண்டுவரப்பட்டது. 

ஐநா சபை
ஐநா சபை

ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கொண்டுவரப்பட்ட  அந்த தீர்மானம் அமெரிக்காவின் விட்டோ அதிகாரத்தில் தோல்வியடைந்தது. அதனையடுத்து பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்பு கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்க கோரும் தீர்மானம் அரபு நாடுகள் அமைப்பால் மீண்டும் கொண்டு வரப்பட்டது.

இதில் மேலும் நடந்த வாக்கெடுப்பில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. 25 நாடுகள் இந்த தீர்மானத்தைப் புறக்கணிப்பு செய்தன. இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்கக்கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த அதிர்ச்சி...  சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!

மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in