வருமான வரி கட்டாத 5,06,671 நபர்களின் மொபைல் சிம் கார்டுகளை முடக்க அரசு உத்தரவு... பாகிஸ்தானில் பரபரப்பு

சிம் கார்டுகள்
சிம் கார்டுகள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான குடிமக்களின் மொபைல் போன் சிம் கார்டுகளை முடக்க பாகிஸ்தானில் உத்தரவிடப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக அரசுகள் பல்வேறு புதுமையான நடவடிக்கைகளில் இறங்குவதுண்டு. அதில் ஒருவிதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களில் முதல் கட்டமாக, சுமார் 5 லட்சம் நபர்களின் மொபைல் போன் சிம் கார்டுகளை முடக்க பாகிஸ்தானில் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தான் கொடி

பாகிஸ்தானின் மத்திய வருவாய் வாரியம் 2023-ம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறிய 5,06,671 நபர்களின் மொபைல் சிம்களை முடக்க முன்னதாக பரிந்துரை செய்தது. ஃபெடரல் சட்ட அமலாக்க நிறுவனம் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் சிம் கார்டை முடக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்தவும், மே 15க்குள் அதற்கான இணக்க அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

வரிப் பட்டியலில் இல்லாத 24 லட்சம் நபர்களை மத்திய வருவாய் வாரியம் அடையாளம் கண்டதோடு அந்த நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிட்டுள்ளது. இந்த 24 லட்சம் பேரில் மத்திய வருவாய் வாரியத்தின் ஓர் அளவுகோலின் அடிப்படையில் சுமார் 5 லட்சம் நபர்களுக்கு எதிராக, சிம் முடக்கம் மூலம் நடவடிக்கை எடுக்கத் துணிந்துள்ளது.

வருமான வரி தாக்கல்
வருமான வரி தாக்கல்

அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் வரிக்குட்பட்ட தங்கள் வருமானத்தை அறிவிக்கவில்லை எனவும், இந்த நபர்கள் 2023-ம் ஆண்டுக்கான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனவும் மத்திய வருவாய் வாரியம் தெரிவித்துள்ளது.

செயலில் உள்ள வரி செலுத்துவோர் பட்டியலில் இருந்து மத்திய வருவாய் வாரியம் மார்ச் 1, 2024 வரை 42 லட்சம் வரி செலுத்துவோரைப் பெற்றுள்ளது. இவர்களின் சிம் கார்டுகளை முடக்க உத்தரவிடப்பட்டபோதும், 2023-ம் ஆண்டிற்கான வரிக் கணக்கை தாக்கல் செய்பவர்களுக்கு, முடக்கப்பட்ட சிம் கார்டுகள் தானாகவே மீண்டும் உயிர் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...
உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in