இயற்கையின் இன்னொரு அதிசயம்... சூரியப் புயல் தாக்குதலால் பூமியில் விளைந்த வடக்கு வெளிச்சங்களின் வான் தோரணம்

சூரிய காந்தப் புயல் காரணமாக பூமியின் வான்வெளியில் வெளிச்சங்களின் தோரணம்
சூரிய காந்தப் புயல் காரணமாக பூமியின் வான்வெளியில் வெளிச்சங்களின் தோரணம்

சூரியப் புயல் தொடர்பான அச்சுறுத்தலின் மறுபக்கமாக, கண்கவரும் மாயாஜால மாற்றங்கள் பூமியின் வான்வெளியில் நிகழ்ந்துள்ளது.

இயற்கையின் அதிசயங்களை, கண்கவரும் மாற்றங்களை நிலத்திலும், நீரிலும் மட்டுமல்ல வானிலும் காணலாம். அந்த வான்வெளி அதிசயங்கள் சாதாரண வானவில் முதல் தொலைதூர நட்சத்திரங்களின் நகர்வு வரை கண்களுக்கு விருந்தளிக்கூடும். அவற்றில் மத்தியில் சூரியப் புயல் காரணமாக பூமியின் வான்வெளியில் அரங்கேறும் அரிய நிகழ்வுகளில் ஒன்று, வடக்கு வெளிச்சங்கள் எனப்படும் அரோரா பொரியாலிஸ் வெளிச்ச நடனங்கள்.

சூரியனின் காந்தப்புயல் பூமியை தாக்குவதை சித்தரிக்கும் படம்
சூரியனின் காந்தப்புயல் பூமியை தாக்குவதை சித்தரிக்கும் படம்

சூரியப்புயல் தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு அடிக்கடி பூமி ஆளாவதுண்டு. சூரியனின் மேற்பகுதியில் நிகழும் மின்காந்த வெடிப்புகள் அங்கிருந்து பூமியை கடந்து செல்லும்போது, அதன் விளைவுகளை பூமி உணர்வதையே சூரியப் புயலின் தாக்கம் என்கிறோம். பொதுவாக இந்த சூரிய காந்தப் புயல் காரணமாக பூமியில் செயல்பாட்டில் இருக்கும் பல்வேறு அதிர்வெண் வரிசைகளில் இடையூறு நிகழ்த்தவும்கூடும்.

இதனால் விமானங்கள், கப்பல் போக்குவரத்து, ஜிபிஎஸ் மற்றும் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு உள்ளிட்டவை பாதிப்புக்கு ஆளாகக்கூடும். ஆனால் சூரிய காந்தப் புயல் குறித்தான முன்கூட்டிய எச்சரிக்கை காரணமாக, பூமியில் அதற்கு உகந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதால் என்பதால், நடைமுறை பாதிப்புகள் இருக்காது. இந்த அச்சுறுத்தலின் மறுபக்கமாக, பூமியின் காந்த வான்வெளியில் இந்த காந்தப் புயல் காரணமாக வடக்கு அல்லது தெற்கு திசைகளில், வான்வெளி வெளிச்சங்களின் கலவையிலான தோரணங்கள் கண்களுக்கு விருந்தாகும்.

சூரியப் புயல் பூமியின் வான்வெளியில் உருவாக்கிய தோற்றம்
சூரியப் புயல் பூமியின் வான்வெளியில் உருவாக்கிய தோற்றம்

இந்த வகையில் காந்தப்புயல் காரணமாக இந்தியாவில் நிகழ்ந்த வானத்து வர்ண வேடிக்கையை இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா வாழ் மக்கள் கடந்த 2 தினங்களாக கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனர். அப்படி இங்கிலாந்து முழுவதும் அரோரா பொரியாலிஸ் எனப்படும் வடக்கு வெளிச்சங்களின் தோரணம் கண்களுக்கு விருந்தளித்தன. தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின், விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் 2003-ம் ஆண்டிலிருந்து மிகவும் சக்தி வாய்ந்ததாக கணித்திருக்கும் இந்த வான்வெளிக் காட்சியானது இங்கிலாந்து மக்களை அதிசயிக்க செய்துள்ளன. வான்வெளி அறிவியல் முதல் அதிசயங்கள் வரை துழாவுவோர் இதனை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த அதிர்ச்சி...  சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!

மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in