ஈரான் பெண்ணுரிமை போராளி... நர்கிஸ் முஹம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முஹம்மதி
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முஹம்மதிBG

2023ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் உரிமைகள் போராளி நர்கீஸ் முஹம்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் கௌரவம் வாய்ந்ததாக கருதப்படும் நோபல் பரிசுகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வந்தது. 6 பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுகளில் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்த நிலையில் ஈரான் நாட்டின் பெண் உரிமைகள் போராளி நர்கீஸ் முஹம்மதிக்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் மனித உரிமைகள் மீறல், சமூக விடுதலை உள்ளிட்டவற்றிற்காக போராடியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 நர்கீஸ் முஹம்மதி
நர்கீஸ் முஹம்மதி

கடந்த 2019ம் ஆண்டு ஈரான் நாட்டில் நிகழ்ந்த பெண்களுக்கான உரிமைப் போராட்டத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் கொல்லப்பட்டார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி கூட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் கலந்து கொண்டார் என்பதற்காக நர்கிஸை, அந்நாட்டு அரசு சிறையில் அடைத்திருந்தது. இவரது கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உலக நாடுகள் உடனடியாக அவரை விடுவிக்குமாறு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in