
கென்யாவில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீஸ் அதிகாரிகள் ஒரு வருடத்திற்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் பிரபல பத்திரிகையாளரான ஹர்ஷத் ஷரீஃப் ராணுவ அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வந்தார். இதன் காரணமாக அந்நாட்டு அரசு அவர் மீது வழக்குகளை தொடுத்து கைது செய்ய முடிவெடுத்தது.
இதனால் பாகிஸ்தானில் இருந்து தப்பி, துபாய், ஐக்கிய அரபு நாடுகள், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தலைமறைவாக இருந்த அர்ஷத் கென்யாவிற்கு சென்று அங்கு பதுங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த ஹர்ஷத் ஷரீஃபை கென்யாவின் சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த சில அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
தடுப்புகள் அமைத்திருந்த போதும், காரில் வேகமாக தப்பிச் செல்ல முயன்றதால் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கென்யா நாட்டு பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் ஹர்ஷத் ஷரீஃப்பின் மனைவி ஜவேரியா சித்திக் ஆகியோர் கென்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
சுமார் ஓராண்டுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணைக்காக போலீஸார் ஆஜராகாத நிலையில், அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸார் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
ஹர்ஷத் ஷரீஃப் தவறுதலாக சுட்டுக் கொலை செய்யப்படவில்லை என்றும் பாகிஸ்தானில் அவரது கொலை திட்டம் தீட்டப்பட்டு அது கென்யாவில் போலீஸாரால் நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக வந்த அர்ஷத் ஷரீஃப் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருப்பது, கென்யா நாட்டிற்கு நேர்ந்த அவமானம் என அந்நாட்டு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!
கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!
சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!
அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!