ஹமாஸை துடைத்தெறியாமல் விடமாட்டோம் - ஐ.நா தீர்மானத்தை நிராகரித்தது இஸ்ரேல்!

இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோகன்
இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோகன்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஐநா பொதுச் சபை நிறைவேற்றிய தீர்மானத்தை திட்டவட்டமாக இஸ்ரேல் நாடு மறுத்துள்ளது. ஹமாஸை துடைத்தெரியும் வரை போரை நிறுத்தப் போவதில்லை எனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தொடர் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பதிலடியாக இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திவரும் தாக்குதலில், நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருவது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐநா பொதுச்சபை தீர்மானத்தை நிராகரித்த இஸ்ரேல்
ஐநா பொதுச்சபை தீர்மானத்தை நிராகரித்த இஸ்ரேல்

இதனிடையே ஐநா பொதுச் சபையில் ஜோர்டான் சார்பில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என கோரி தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டது. இதில் 120 வாக்குகள் ஆதரவாகவும், 14 எதிராகவும் பதிவாகின. இந்தியா, பனாமா, லித்துவேனியா, கிரீஸ் உட்பட 45 நாடுகள் இந்த வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இந்த தீர்மானத்தில், காசா பகுதியில் பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளான குடிநீர், மருத்துவம் உள்ளிட்டவற்றை தடையின்றி எடுத்துச் செல்ல இருதரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் முன்மொழியப்பட்டிருந்தது.

ஹமாஸை துடைத்தெறியும் வரை ஓயமாட்டோம் - இஸ்ரேல்
ஹமாஸை துடைத்தெறியும் வரை ஓயமாட்டோம் - இஸ்ரேல்

இதனிடைய இந்த தீர்மானத்திற்கு இஸ்ரேல் நாடு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு தீர்மானத்தை முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. உலகம் எப்படி நாஜிக்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரை துடைத்தெறிந்தனரோ, அதேபோல ஹமாஸ் அமைப்பினரையும் துடைத்தெறிவதே இந்த போரின் நோக்கம் என இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் எலி கோகன் தெரிவித்துள்ளார்.

இன அழிப்புக்கு பிறகு யூதர்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல் இது எனவும், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அனைத்து உரிமைகளும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in