ஏவுகணைகள்
ஏவுகணைகள்

அமெரிக்கப் போர்க்கப்பலை குறிவைத்த ஈரான் ஏவுகணை... நெருங்குகிறதா உலகப் போர்?

ஏமன் கடற்கரைக்கு அருகே உலவிக்கொண்டு இருந்த அமெரிக்க கடற்படை கப்பல் மீது  ஈரானிய ஆதரவு ஹவுதி போராளிகள்  ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டதால்  மூன்றாம் உலகப்போர்  தொடங்கி விடுமோ என்ற அச்சம் பரவலாக  எழுந்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் ஈரான் நேரடியாக தலையிட்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இந்த பக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல் இஸ்ரேலுக்கு ஆதரவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த யுஎஸ்எஸ் கார்னி போர் கப்பலை நோக்கித்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஈரான் ஆதரவு ஹவுதி படையால் ஏவப்பட்ட மூன்று தரைவழி தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்களை கடந்த 24 மணி நேரத்தில் சுட்டு வீழ்த்தி உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் இந்த ஏவுகணைகள் அந்த பகுதியில் இருந்த அமெரிக்க போர் கப்பலை நோக்கி வீசப்பட்டதாகவும், தோராயமாக மூன்று ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன என்றும் கூறியுள்ள அமெரிக்கா, இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று  தெரிவித்துள்ளதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக ரகசியமாக ஈரான் படைகளை அனுப்பி உள்ளது. இன்னொரு பக்கம் ஈரானின் நேரடி ஆதரவில் ஹெஸ்புல்லா இயக்கம் இந்த போரில் களமிறங்கியுள்ளது. லெபனானில் இருந்து கொண்டு இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை விட்டுக்கொண்டு இருக்கிறது. 

சிரியா போர், லெபனான் போர் 2008 என்ற பல்வேறு போர்களில் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு எதிராக போராடி இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது இவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதால் இதற்கு பின் ஈரானும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

முக்கியமாக இந்த படைக்கு பண ரீதியாக, ஆயுத தளவாட ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக ஈரான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. ஈரானின் இந்த செயல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை டென்ஷனுக்கு உள்ளாக்கி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் - அமெரிக்கா இடையே ஏமனில் மோதல் ஏற்பட்டு உள்ளது. இதெல்லாம் சேர்ந்து மூன்றாம் உலகப்போராக வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in