இங்கிலாந்து அதிர்ச்சி... கேன்சரால் கவலைக்கிடமான மன்னர் சார்லஸ்; இறுதிச்சடங்குக்கு இப்போதே தயாராகும் அரண்மனை

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்

புற்றுநோய் பாதிப்பு முற்றியதில் இங்கிலாந்து மன்னர் கவலைக்கிடமாக இருக்கிறார். இதனையடுத்து இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளது.

2022, செப்டம்பரில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடினார். ஆனால் எதிர்பாரா வகையில் அவர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானார். புற்று நோய் பாதிப்பை அவர் வெளியுலகுக்கு உறுதி செய்தபோதும், அது எம்மாதிரியான பாதிப்பு எந்த கட்டத்தில் உள்ளது என்பதை மன்னரோ, அரண்மனை நிர்வாகமோ இன்னமும் தெரிவிக்கவில்லை.

மன்னல் சார்லஸ் - பட்டத்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேத் மிடில்டன்
மன்னல் சார்லஸ் - பட்டத்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேத் மிடில்டன்

இதனிடையே 75 வயதாகும் மன்னரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கான பிரம்மாண்ட இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் அரண்மனை நிர்வாகம் இப்போதே இறங்கி இருப்பதும் தற்போது வெளிப்பட்டு உள்ளது. ’மெனாய் பாலம்’ என்ற மறைமுகப் பெயரிலான மன்னரின் இறுதிச்சடங்கு ஏற்பாட்டுக்கான ஆவணங்கள் தற்போது வெளியே கசிந்துள்ளன. கூடவே அடுத்த மன்னராக அரியணை ஏற வேண்டிய பட்டத்து இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேத் மிடில்டனை பாதித்த புற்றுநோய் பாதிப்பு காரணமாக, தயங்கி வருவது குறித்த செய்திகளும் வெளியாகி உள்ளன.

மெனாய் பாலம் என்பது ஆங்கிலேசி தீவை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் ஒரு தொங்கு பாலத்தின் பெயராகும். இதன் பெயரில் தற்போதைய மன்னர் சார்லஸின் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. இதே போன்று ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள், ஆபரேசன் லண்டன் பாலம் என்ற மறைமுகப் பெயரில், அவர் உயிரோடு இருக்கும்போதே ஆவணங்களாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மன்னர் சார்லஸ்
இங்கிலாந்து மன்னர் சார்லஸ்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை பாதித்த புற்றுநோய் புரோஸ்டேட் ரகம் என செய்திகள் பரவிய நிலையில் அவற்றை மன்னரே மறுத்துள்ளார். எந்த வகையிலான புற்று, எவ்வளவு காலமாக அவரை அது பாதித்திருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அந்த புற்றுநோய் நவீன சிகிச்சைகள் எதற்கும் மட்டுப்படாது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில், பக்கிம்ஹாம் அரண்மனை பல சவால்களுக்கு தயாராகி வருகிறது. மன்னர் இறுதிச்சடங்குக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் மட்டுமன்றி அதற்கான உலகத்தலைவர்கள் வருகை, துக்கம் அனுஷ்டிப்பது, இறுதி ஊர்வலம் தொடங்கி சடங்குகள் வரையிலான நடைமுறைகள், சிறிய இடைவெளியில் அடுத்த மணிமகுடத்துக்கு இளவரசர் வில்லியமை தயார் செய்வது போன்றவை இந்த சவால்களில் காத்திருக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in