9.2 லட்சம் கிமீ தொலைவைத் தாண்டியது ஆதித்யா விண்கலம்... இஸ்ரோ உற்சாகம்!

ஆதித்யா எல் 1
ஆதித்யா எல் 1

பூமியின் ஈர்ப்பு மண்டலத்திலிருந்து வெற்றிகரமாக விடுபட்ட ஆதித்யா எல்.1விண்கலம், அடுத்தகட்டமாக அதன் இலக்கான சூரியனின் எல்.1 புள்ளியை நோக்கி விரைந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரனை ஆராய்வதற்கான சந்திரயான் திட்டங்களைப் போல, சூரியனை ஆராய்வதற்கான ஆதித்யா திட்டத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது. சூரியனை விண்வெளி மண்டலத்திலிருந்து ஆராயும் இஸ்ரோவின் இந்த முதல் திட்டத்துக்காக ஆதித்யா எல்.1 அனுப்பப்பட்டது.

செப்.2 அன்று ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி ரக ராக்கெட் மூலம் விண்ணுக்குத் தாவியது. தொடர்ந்து பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம், படிப்படியாக அதன் சுற்றுவட்டப் பாதைகளை உயர்த்திச் சென்றது.

பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடக்கும் பயணம்
பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடக்கும் பயணம்

இவ்வாறு பல்வேறு படிநிலைகளில் பூமியின் சுற்றுவட்டப்பாதைகளில் உயர்ந்து சென்ற ஆதித்யா எல் 1, அதன் பின்னர் முழுமையாக பூமியின் ஈர்ப்பு மண்டலத்திலிருந்து விடுபட்டு சூரியனை நோக்கி விரைந்தது. இதன்படி இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவலின்படி பூமியிலிருந்து சூரியனை நோக்கிய ஆதித்யாவின் பயணம் சுமார் 9.2 லட்சம் கிமீ தொலைவைத் தாண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யாவின் அடுத்த இலக்காக பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிமீ தொலைவில் இருக்கும் லாக்ரேஞ்ச் புள்ளியில் சூரியனை நோக்கி நிலை நிறுத்தப்படும். இங்கிருந்தபடி சூரியனின் மேல்வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகள் தொடர்பான ஆய்வுகளை ஆதித்யா வெற்றிகரமாக மேற்கொள்ளும்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in